சென்னை விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது.துபாயிலிருந்து சென்னை வந்த 8 பயணிகளிடம் இருந்து 9 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.4.5 கோடி. அவர்கள் அனைவரையும், சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

துபாயிலிருந்து சென்னை வரும் பயணிகள் ஒரு குழுவாக தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

அவர்களில் 8 பேர் அவசரமாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றனர். பதற்றத்துடன் காணப்பட்ட அவர்களிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்குபின் முரணான பதில் அளித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட தனிப்பட்ட சோதனையில், ஜீன்ஸ் பேன்ட் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கப்பசை பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றிலிருந்து 9 கிலோ சுத்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 4.5 கோடி. இவர்கள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டு, மேல் விசாரணை நடைப்பெறுவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா