வானியல் ஆய்வுக்கான ஏரீஸ் பயிற்சி நிகழ்ச்சியில் நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

வானியல் ஆய்வுக்கான ஏரீஸ் பயிற்சி நிகழ்ச்சியில் நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்


நாடு முழுவதுமுள்ள 25-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் இருந்து கலந்து கொண்ட சுமார் 100 மாணவர்களுக்கு இணைய வழியில் நடைபெற்ற பயிற்சி திட்டம் ஒன்றின் மூலம் வானியல் குறித்த பல்வேறு தலைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன

தொலைநோக்கிகள், விண்மீன் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி, எக்ஸோ கிரகங்கள், சூரிய இயற்பியல், நட்சத்திர வானியல், ஏரிஸில் உள்ள வசதிகளை ஆய்வு செய்தல், 30 மீட்டர் தொலைநோக்கி திட்டம் மற்றும் ஆதித்யா எல்1 விண்வெளி திட்டம் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

முதுநிலை மாணவர்களுக்கான இந்த எட்டு நாள் பயிற்சி திட்டத்தின் பெயர் ‘வானியல் ஆய்வுக்கான ஏரீஸ் பள்ளி - 2021’ ஆகும். போட்டோமெட்ரி, ஸ்பெக்ட்ரோஸ்கோபி, போலாரிமெட்ரி மற்றும் இயந்திர கற்றல் குறித்த செய்முறை விளக்கங்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான கண்காணிப்பு அறிவியலுக்கான ஆர்யபட்டா ஆய்வு நிறுவனம் இந்த பயிற்சியை நடத்தியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா