இலஞ்ச வழக்கில் கைதான ஐபிஎஸ் அதிகாரி மணீஷ் அகர்வாலின் ஜாமீன் மனு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி


ஜெய்ப்பூரில் இலஞ்ச வழக்கில் கைதான ஐபிஎஸ் அதிகாரி மணீஷ் அகர்வாலின் ஜாமீன் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ந அவருக்கெதிராக 4,000 பக்கத்தில் குற்றப்பத்திரிகை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லியிலிருந்து மும்பைக்கான அதிவேக நெடுஞ்சாலைக் கட்டுமான நிறுவனப் பிரதிநிதிகளிடம் இலஞ்சம் கோரிய விவகாரத்தில், எஸ்.டி.எம் பிங்கி மீனா, தவுசாவைச் சேர்ந்த எஸ்.டி.எம் புஷ்கர் மிட்டல், ஐபிஎஸ் அதிகாரி மணீஷ் அகர்வால், புரோக்கர் நீரஜ் மீனா ஆகியோரை பிப்ரவரி இரண்டாம் தேதி ராஜஸ்தான் மாநில இலஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்ட

வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி மணீஷ் அகர்வால், புரோக்கர் நீரஜ் மீனா ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். இருப்பினும், ஐ.பி.எஸ் அதிகாரி மணீஷ் அகர்வாலின் சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 10 நாட்கள் இடைக்கால ஜாமீன் கிடைத்த நிலையில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், முறையான ஜாமீன் கேட்டு மணீஷ் அகர்வால் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், ​​மணீஷ் அகர்வாலின் ஜாமீன் மனுவை நிராகரித்தது.

மேலும் புரோக்கர் நீரஜ் மீனாவின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்த நிலையில், இலஞ்ச ஒழிப்புத் துறையின் சார்பில் விசாரணை நீதிமன்றத்தில், 4,000 பக்கத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா