மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் நிதி அமைச்சர் உரை

 ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது மூன்று மாதங்களுக்கொரு முறை நடத்தப்பட வேண்டிய கூட்டம், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைபெறாத நிலையில் எட்டு மாதங்களுக்குப் பின் நேற்று காலை 11 மணிக்கு நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 43-வது கூட்டத்திற்கு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளிக் காட்சி மூலம் நடத்தியதில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாகக் கலந்து கொண்டார்.

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய உரையின் முக்கிய அம்சங்களைக் காணலாம்.`இந்த கூட்டத்தில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது மாநிலத்தின் சார்பாக பங்கேற்பதற்கு என்னைப் பரிந்துரைத்த தமிழக அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குழுவில் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களில் பங்களிப்பை வழங்கிடவும், இந்த கூட்டத்தில் பரிசீலனையில் உள்ள பல்வேறு விஷயங்களில் தமிழக அரசின் கருத்துகளை முன்வைக்கவும் நான் காத்திருக்கிறேன்.

இந்த மன்றத்தில் இது என்னுடைய முதல் உரையாகும். இங்கே, தமிழ்நாட்டு அரசின் பிரதிநிதியாகவும், எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியாகவும், நான் பங்கேற்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக கடைபிடிக்கும் கொள்கைகள் மற்றும் லட்சியங்களுக்காக, அக்கட்சி மக்களின் தீர்க்கமான ஆதரவை பெற்றது. இந்த மன்றம் அமைக்கப்பட்டதிலிருந்து இது எங்கள் கட்சியின் முதல் உரையாகும். எனவே, நடைமுறையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரியின் அமைப்பு மற்றும் மாநில சுயாட்சி மீதான அதன் விளைவுகள் குறித்து எங்கள் கருத்துகளை முன்வைக்க உங்களையும், இந்த மன்றத்தின் சக உறுப்பினர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி தனது உரையை தொடங்கி

``உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசிகள், கொரோனா தடுப்பு மருந்துகளாக அறியப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கொரோனா காரணமாக 2021- 2022 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும். மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியங்கள் இல்லை என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ளவ் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வரி விலக்கு கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருத்துவப் பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் சிகிச்சை கருவிகள் மற்றும் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும் எனவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் வரி விலக்குப் பட்டியலில் சேர்க்கப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். மாநிலங்கள் தங்கள் தேவைகளுக்காக பேசிக் கொண்டிருந்த போது நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் மட்டும் தான்  மாநில உரிமை பற்றி பேசியிருக்கிறார். தங்கள் தேவைகள் பற்றி பேசும் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அரசு கொடுப்பதில்லை. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் அவை வருவாய் ஈட்டுவதில் பின் தங்கியிருந்தாலும் அள்ளிக் கொடுக்கிறார்.

ஆனால் வருவாய் ஈட்டும் மாநிலங்களுக்கு கொடுப்பதில்லை. இந்த காலக்கட்டத்தில்  தமிழக நிதி அமைச்சரின் குரல் பல்லாண்டுகளாக இங்கு பேசப்பட்டு வரும் சுயாட்சி தத்துவத்தின் ஒரு சின்ன வெளிப்பாடு. இன்று அவர் கொடுத்த விளக்கம்  சில மாநிலங்களின் பிரதிநிதிகள் பேசுவதை  உக்கார்ந்து கேட்பது  ரொம்ப கொடுமையாக இருக்கிறது என்று சிரிக்கிறார். தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன் முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்

அப்போது ஹிந்தியில் அவர்கள் பேசுவதே புரியவில்லை

நேற்று நிறைய மாநில நிதியமைச்சர்கள் இந்தி மொழியில் பேசினார்கள். எனக்கு ஓரளவுக்கு இந்தி புரியுமே தவிர அதிக அளவு தெரியாது. அருகே நிதித்துறை செயலாளர் இருந்ததால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். நான் ஆங்கிலத்தில் பேசியதால் இந்தி மட்டுமே தெரிந்த நிதியமைச்சர்களுக்கு நான் பேசுவது புரிந்திருக்காது. இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் இருப்பது ஆலோசனை கூட்டத்தின் பயன்பாட்டைக் குறைத்து விடும். நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்புக் கருவிகள் கொடுக்கப்பட்டிருப்பது போல, இங்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நான் வற்புறுத்தினேன்  என தெரிவித்தார்.    .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா