கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆம்போடெரிசின்-பி கூடுதலாக ஒதுக்கீடு அமைச்சர் சதானந்த கவுடா தகவல்
இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆம்போடெரிசின்-பி கூடுதலாக ஒதுக்கீடு – திரு சதானந்த கவுடா
பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும், கருப்பு பூஞ்சை (மியூகோமைகோசிஸ்) தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விரிவாக ஆய்வு செய்ய பிறகு, ஆம்போடெரிசின்-பி மருந்து 23,680 குப்பிகளை கூடுதலாக, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இன்று ஒதுக்கி இருப்பதாக மத்திய இரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.
நாடெங்கிலும் சுமார் 8,848 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 40 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 140 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்து தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மிக அதிகமாக குஜராத்தில் 2,281 பேரும், அதற்கடுத்து மகாராஷ்டிராவில் 2,000 பேரும், ஆந்திரப்பிரதேசத்தில் 910 பேரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்