ஆந்திரக் கடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு
புவி அறிவியல் அமைச்சகம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிகக் கன மழையும், ஆந்திரக் கடலோரப் பகுதிகள், ஏனாம், ராயலசீமா, கடலோர & தெற்கு உள் கர்நாடகம், கேரளா & மாஹி ஆகியப் பகுதிகளில் கன மழையும் இன்று ( மே, 21 ) பெய்யக்கூடும்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிகக் கன மழையும், ஆந்திரக் கடலோரப் பகுதிகள், ஏனாம், ராயலசீமா, கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகம், கேரளா & மாஹி ஆகிய பகுதிகளில் கன மழையும் இன்று (மே, 21 ) பெய்யக்கூடும்.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் இன்று தொடங்கும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், லட்சத் தீவுகள் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

மேலும் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்த நாட்களில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா