ஆபத்தான லேசர் கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் தன்மையுடைய இயற்கை சாயம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஆபத்தான லேசர் கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் தன்மையுடைய இயற்கை சாயம்


அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் தாவர இலையிலிருந்து கிடைக்கும் கருநீல (இண்டிகோ) சாயத்திற்கு, அபாயகரமான லேசர் கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் தன்மை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். லேசர் கதிர்களைத் தடுக்கும் ஒளியியல் வரம்புகளை உருவாக்க இது பயன்படக்கூடும்.

பெங்களூருவைச் சேர்ந்த ராமன் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் கென்ஸ்ரீ பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இயற்கை கருநீல சாயத்தின் ஒளியியல் தன்மைகள் பற்றி ஆய்வு செய்து, லேசர் கதிர்களிலிருந்து மனித கண்களைப்  பாதுகாக்கும் கருவியாக செயல்படும் திறனை இந்த சாயம் பெற்றிருப்பதைக் கண்டறிந்தார்கள். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி, ‘ஆப்டிகல் மெட்டீரியல்ஸ்' என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாக துணிகளுக்கு இயற்கை முறையில் வர்ணம் தீட்டுவதற்கு இந்த வகையான சாயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் ஆய்வகங்களில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தாவரத்தின் இலைகளிலிருந்து இந்த சாயம் பெறப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா