வீட்டுக்கு அருகே தடுப்பூசி மையம் அமைக்கும் வசதி, ஏராளமான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும்: சமூக நீதி அமைச்சர் தகவல்
சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்  வீட்டுக்கு அருகே தடுப்பூசி மையம் அமைக்கும் வசதி, ஏராளமான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும்: திரு ரத்தன் லால் கட்டாரியா

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக அவர்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகே தடுப்பூசி மையங்களை அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்ற மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா கூறுகையில், ‘‘ இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள 14 கோடி மூத்த குடி மக்களுக்கும், 2.2 கோடி மாற்றுத்திறனாளிகளுக்கும் மிகவும் பயனளிக்கும்’’ என்றார்.

கொவிட் பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவதில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சனைகளை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம், சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முன்பே தெரிவித்திருந்தது.

மூத்த குடிமக்களுக்கு கொவிட் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஒரு ஆலோசனையையும், தில்லி எய்ம்ஸ் முதியோர் துறையுடன் ஆலோசித்து சமூகநீதி மற்றும் மேமபாட்டுத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. 

திருநங்கைகளுக்கு உளவியல் உதவி அளிக்கவும், உதவி எண்-ஐ மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. நிச்சயமற்ற சூழல் காரணமாக மிகுந்த மனஅழுத்தத்துக்கு உள்ளாகும் திருநங்கைகளுக்கு மனோதத்துவ நிபுணர்கள் மூலம் ஆலோசனை அளிக்கப்படுகிறது. 

மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு விதிமுறைகளால், மிகவும் பாதிக்கப்பட்ட  திருநங்கைகளுக்கு ரூ.1,500 பிழைப்பூதியத்தையும் மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்தது.

உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டத்தின் கீழ், நாட்டில் 130 நாட்களில் 20.27 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். கொவிட் 2ம் அலைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கூட்டாக ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா வலியுறுத்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா