புதிய அரசின் உயர் பதவிகளில் நேர்மையான அதிகாரிகள் வரவால் மணல் கொள்ளை கூட்டம் பரிதவிப்பு
2003 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழகத்திலுள்ள ஆறுகளிலிருந்து அரசாங்கம் விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு அள்ளப்பட்ட மணல் அளவு என்று மாநில அரசாங்கம் தற்போது தந்த விவரங்கள் இவை.

இது அரசாங்கம் சொன்ன கணக்கு, மாநிலத்தில் எங்கேயும் விதிமுறைகளைப் பின்பற்றி மணல் அள்ளப்படுவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே!

கொஸஸ்தலையாறு – 7,08,682 யூனிட் 

கொஸஸ்தலையாறு (2) – 8,19,396 யூனிட் 

ஆரணியாறு – 9,34,152 யூனிட் 

ஆரணியாறு (2) – 9,07,848 யூனிட் 

மேல்பாலாறு – 24,82,558 யூனிட் 

கீழ்பாலாறு – 52,15,758 யூனிட் 

கீழ்பாலாறு (2) - 45,93,792 யூனிட் 

மேல் பெண்ணையாறு – 7,60,136 யூனிட் 

கொள்ளிடம் – 3,18,112 யூனிட்

கொள்ளிடம் (2) – 6,14,229 யூனிட் 

பெரியாறு வைகை – 1,13,190 யூனிட் 

மஞ்சளாறு – 1,15,524 யூனிட் 

கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறு – 16,15,266 யூனிட் 

காவிரி ஆற்றுப் படுகை – 7,30,240 யூனிட் 

அமராவதி – 5,38,225 யூனிட் 

அமராவதி (2) – 2,47,047 யூனிட் 

மணிமுத்தாறு – 3,69,158 யூனிட் 

சிற்றாறு – 1,15,523 யூனிட் 

வைப்பாறு – 7,60,136 யூனிட் 

வைப்பாறு (2) – 10,56,698 யூனிட் 

வெள்ளாறு – 8,83,574 யூனிட் 

தாமிரபரணி – 6,73,856 யூனிட் 

மணிமுத்தாறு (நெல்லை) – 2,80,262 யூனிட் 

கோயமுத்தூர்  வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் இந்தத் தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டுப் பெற்ற தகவல்.

2011 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் அள்ளப்பட்ட அல்லது மணல் மாஃபியாவால் சூறையாடப்பட்ட மண் அளவு தனிக் கணக்கு (ஆற்றில் ஒரு அடி அளவுக்கு மணல் உருவாக தோரயமாக 100 ஆண்டுகள் ஆகுமென்பது அறிவியல் கணக்கு

பக்கத்து தென் மாநிலங்களான கேரளத்தில் 80 கிலோமீட்டருக்கு மேலே பாயும் நதிகள் 25 இருக்கின்றன. அங்கு மணல் அள்ளத் தடை ஆனால் எந்தவொரு கட்டுமானப் பணிகளும் தடை பட்டதாகச் செய்தியில்லை. 

அதே போல் கர்நாடகாவில் ஆறுகளில் மணல் அள்ள முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கானாவில் ஒளிவு மறைவின்றி ஸ்டாக் யார்டு, லோடிங் போன்ற பல மேல்பூச்சு மோசடி வேலைகளின்றி மணல் விற்பனை முழுவதும் பகிரங்கமாக ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது. 

மற்ற மாநிலங்களில் புதிதாக கட்டப்படும்  கட்டுமானப் பணிகளுக்கு தமிழகத்திலிருந்தே மணல் சப்ளை செய்யப்படுகிறது.மணல் கொள்ளையில தான், பெரிய அளவில் வருமானம் கொட்டுது... அ.தி.மு.க., ஆட்சியில, மணல் குவாரி, 'டீலிங்'குகளை ஆரம்பத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருத்தர் கவனிச்சார். அவர் சம்பந்தம் செய்த வழி திமுக என்பதால்   

''அவருக்கு அப்புறம், வெளிமாநில பெரிய கான்ட்ராக்டர் ஒருத்தர், மணல் டீலிங் விஷயத்தை பார்த்துக்கிட்டார் 

''இப்போ, ஆட்சி மாறியதால, மணல் டீலிங் செய்யுற அதிகார மையமும் மாறுது. புதிய ஆளுங்கட்சிக்கு நெருக்கமான, மதுரை புள்ளி ஒருத்தர், அதிகார மையமா வரப் போறதா பேச்சு

''அதனால, அந்த மதுரை புள்ளியை சந்திச்சு, ஒரு கூட்டமே, 'பெட்டி' கொடுத்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு

பத்து வருடங்களுக்கு முன் தோண்டிய மணல் பள்ளத்தை மூட எத்தனை படியளந்தாலும் காசு போதாது. மணலுக்கான  ஊழல் வாதிகள் கூட்டணி இப்போது அடக்கி வாசிக்கக் காரணமாகவும், ஆற்றின் மணல் களவாடப்படாமலிருக்க. தற்போது உயர் பதவிகளை அலங்கரிக்கும் இறையன்பு போல நேர்மையான அதிகாரிகள் மற்றும் அவர்களின் தற்போதைய சிறந்த வெளிப்படையான செயல்பாடு தான் காரணம் என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களின் பேச்சாகும். மனச்சாட்சி இல்லாத மணல் கொள்ளை சின்டிகேட் மூலம் பல கோடிகளில் கொழுந்து வாழ்ந்த பலர் மீண்டும் வாய்ப்பு எதிர் பார்த்து வேட்டை நாய் போலக் காத்திருக்க அரசே மணல்  குவாரிகள் நடத்தலாம் அதிகாரிகள் ஊழலின்றி மற்றும் விமர்சனம் இன்றி மக்கள் விரும்பும் நல்லரசாக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா