டாப்ஸ் மையக் குழுவில் நான்கு பேருடன் அங்கிதா ரெய்னா சேர்ப்பு,


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்  டாப்ஸ் மையக் குழுவில் நான்கு பேருடன் அங்கிதா ரெய்னா சேர்ப்பு, மூன்று விளையாட்டுகளுக்கு ரூபாய் 1 கோடி மதிப்புடைய நிதி முன்மொழிதல்களுக்கு ஒப்புதல்

டாப்ஸ் என்று அழைக்கப்படும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம் எனும் திட்டத்தில் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா இன்று இணைத்துக் கொள்ளப்பட்டார்.

குஜராத்தில் பிறந்து வளர்ந்த அங்கிதா ரெய்னா, பெண்கள் இரட்டையர் பிரிவில் உலகின் முதல் 100 இடங்களில் ஒன்றை சமீபத்தில் பிடித்ததோடு, ஆஸ்திரேலியாவில் உள்ள பிலிப் தீவில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் டபிள்யு டி ஏ 250 பட்டத்தையும் முதல் முறையாக வென்றார். பில்லி ஜீன் கிங் கோப்பைக்காக இந்தியாவின் சார்பில் அவர் சானியா மிர்சாவுடன் கைகோர்த்துள்ளார்.

அங்கிதா ரெய்னாவுடன், டோக்கியோ ஒலிம்பிக் தகுதி போட்டியில் சமீபத்தில் சாதனை படைத்த நான்கு விளையாட்டு வீரர்களும் டாப்ஸ் மையக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் படகுப் போட்டி வீரர்கள் அர்ஜூன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோர் டாப்ஸ் வளர்ச்சி குழுவிலிருந்து மைய குழுவுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். மல்யுத்த வீரர்கள் சீமா பிஸ்லா மற்றும் சுமித் மாலிக் ஆகியோரும் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற மிஷன் ஒலிம்பிக் மையக் கூட்டத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நிதி முன்மொழிதல்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா