டவ்-தே புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் மறுசீரமைப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது மின்துறை அமைச்சகம்

எரிசக்தி அமைச்சகம் டவ்-தே புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் மறுசீரமைப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது மின்துறை அமைச்சகம்

டவ்-தே புயலால் ஏற்பட்டுள்ள மின்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக மத்திய மின்துறை அமைச்சகம் (செயலாளர், மின்சாரம்), மாநில மின் பயன்பாடுகள், பி.ஜி.சி.ஐ.எல், ஆர்.இ.சி, போசோகோவுடன் தொடர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

டவ்-தே சூறாவளிப் புயல் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளான குஜராத் மாநிலத்திலும், யூனியன் பிரதேசமான டையூவிலும், மின் மறுசீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் மின்துறைச் செயலாளர் நேற்று சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் பி.ஜி.சி.ஐ.எல் நிறுவனத்தின் சி.எம்.டி மற்றும் ஐ.இ.இ.எம்.ஏ தலைவர், ஏ.சி.எஸ் எனர்ஜி குஜராத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவசரகால மறுசீரமைப்பு அமைப்பு (பத்து 220 கி.வாட். மின் கோபுரங்களை மாற்றக்கூடியது) மூலம் 150-க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த மின்துறைப் பணியாளர்கள் குழு குஜராத்தை அடைந்துள்ளது என்றும், டையுவுக்கு மின்சாரம் வழங்கும், மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 220 கி.வாட். மின்பாதையை மறுசீரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் பி.ஜி.சி.ஐ.எல். கூறியுள்ளது.

66 கி.வாட் மின் அமைப்பை மறுசீரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தக்காரர்களின் பட்டியலையும் பி.ஜி.சி.ஐ.எல் வழங்கியது. மறுசீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக மின் சாதன உற்பத்தியாளர்கள் மற்றும் பரிமாற்ற இணைப்புகளை அமைப்பதில் ஈடுபட்டுள்ள முக்கிய ஒப்பந்தக்காரர்களுடன் ஒருங்கிணைப்பதாக ஐ.இ.இ.எம்.ஏ உறுதியளித்தது. மறுசீரமைப்பு பணிகளுக்கு தேவையான பொருள் மற்றும் மனிதவளத்தை வழங்குவதாக மாநில அரசுகள் உறுதியளித்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா