யாஸ் புயல்: மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்திய முப்படைகளும் தயார் நிலையில்

பாதுகாப்பு அமைச்சகம்

யாஸ் புயல்: மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் உள்ளனவடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் எனும் புயலாக உருவாகி, அடுத்த 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடா மீது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே மே 26 அன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், புயலின் அசைவுகளை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

யாஸ் புயலை எதிர்கொள்வதற்காக கிழக்கு கடற்படை தள தலைமையகம் மற்றும் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பகுதிகளின் கடற்படை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து இருப்பதோடு மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக அவர்களோடு தொடர்பில் உள்ளனர்.

தயார் நிலையில் ஒரு பகுதியாக, எட்டு வெள்ள நிவாரண குழுக்கள் மற்றும் நான்கு நீச்சல் குழுக்கள் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தயார் நிலையில் உள்ளன. நான்கு கடற்படை கப்பல்கள், மருத்துவ குழுக்கள் மற்றும் இதர குழுவினர் தேவையான உதவிகளை அளிப்பதற்காக ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையோரப் பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர்.

மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்வதற்காகவும், பாதிக்கப்பட்டுள்ள நபர்களை மீட்பதற்காகவும், தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காகவும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் டேகா மற்றும் சென்னைக்கு அருகிலுள்ள ஐஎன்எஸ் ராஜாளி ஆகிய கடற்படைக்கு சொந்தமான விமான நிலையங்களில் கடற்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.               பாதுகாப்பு அமைச்சகம்

யாஸ் புயலை எதிர்கொள்வதற்குத் தயார்நிலையில் ஆயுதப்படைகள்.

வரும் மே 26-ஆம் தேதி கிழக்கு கடற்கரையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் யாஸ் புயலினால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக ஆயுதப்படைகள் முழுவீச்சில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.‌ மே 23-ஆம் தேதி வரை இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களையும் 70 டன் சரக்குகளையும் ஜாம்நகர், வாரணாசி, பாட்னா மற்றும் அரக்கோணத்திலிருந்து கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் போர்ட் பிளேயருக்கு ஏற்றிச் சென்றுள்ளது.

16 விமானங்களும், 26 ஹெலிகாப்டர்களும் உடனடித் தேவைக்காகத் தயார் நிலையில் உள்ளன. மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பிரிவின் பத்து படைகள் புவனேஸ்வருக்கும் கொல்கத்தாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளதோடு, ஐந்து குழுக்கள் போர்ட் பிளேயரில் தயார் நிலையில் உள்ளன. கிழக்குக் கடற்படை மற்றும் அந்தமான் நிக்கோபார் கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்கள், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவுவதற்கான மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணங்களுடன் தயாராக உள்ளன.‌ நான்கு நீச்சல் குழுக்கள் மற்றும் பத்து வெள்ள நிவாரணக் குழுக்கள், கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் சிலிகாவில் பொது நிர்வாகத்திற்கு குறுகிய காலத்தில் உதவிகளை வழங்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளன.

ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதனை எதிர்கொள்வதற்காக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏழு வெள்ள நிவாரண குழுக்களும் இரண்டு நீச்சல் குழுக்களும் வெவ்வேறு பகுதிகளில் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக, விமானப்படைக்கு சொந்தமான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் விசாகப்பட்டினம் மற்றும் போர்ட் பிளேயரில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகத் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.

எட்டு வெள்ள நிவாரணக் குழுக்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் மூன்று பொறியாளர் பணிக் குழுக்கள், பொது நிர்வாகத்தின்  அழைப்பிற்காக காத்திருக்கின்றன. பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்களின் நிர்வாகத்தினருடன் ஆயுதப்படை தொடர்பில் உள்ளது. கொவிட்- 19 சிகிச்சைக்காகவும், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிராணவாயுவை மருத்துவமனைகளுக்குதடையின்றி கொண்டு செல்வதற்காகவும் சாலை மற்றும் ரயில் இணைப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆயுதப்படை குழுக்கள் பணியாற்றுகின்றன.

புயலினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை எதிர்கொள்ளவும், உயிர்களை பாதுகாக்கவும் ஆயுதப்படை முழு அளவில் தயாராக உள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம்

யாஸ் புயலை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது இந்திய கடலோர காவல் படை

யாஸ் புயலை முன்னிட்டு, இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

யாஸ் புயல், கிழக்கு கடலோர பகுதியை மே 26ம் தேதி தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு, கடலோர காவல் படை மையங்கள் அனைத்தும் விழிப்புடன் உள்ளன. வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடலோர காவல்படையின், கப்பல்கள், விமானங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இந்திய கடலோர காவல்படையின் தொலைதூர மையங்கள், வானிலை குறித்த எச்சரிக்கைகளை உள்ளூர் மொழியில் எம்எம்பி ரேடியோ மூலம் கடற் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், மீனவர்களுக்கும் ஒலிபரப்பி வருகிறது. வங்க கடல் பகுதியில் நுழையும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்க சர்வதேச பாதுகாப்பு வலைதளமும் செயல்படுத்தப்பட்டு ‘நேவ்டெக்ஸ்’ எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

வங்க கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிற்கும் கப்பல்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதி மற்றும் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் கடலோர பகுதிகளிலும், நாள் ஒன்றுக்கு  16 கப்பல்களையும், 3 விமானங்களையும் இந்திய கடலோர காவல்படை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

மேலும், கடலோர காவல் படையின் 31 பேரிடர் மீட்பு குழுக்கள் படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகளுடன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் தயார்நிலையில் உள்ளன.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், தற்போது வரை, 254 படகுகள் பாதுகாப்பாக கரை திரும்புவதை இந்திய கடலோர காவல் படை உறுதி செய்துள்ளது. மேலும் 77 வர்த்தக கப்பல்கள், நங்கூரமிட்டு நிற்கும் கப்பல்களுக்கும் இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் யாஸ் புயலை எதிர்கொள்வதற்குத் தயார்நிலையில் ஆயுதப்படைகள்

வரும் மே 26-ஆம் தேதி கிழக்கு கடற்கரையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் யாஸ் புயலினால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக ஆயுதப்படைகள் முழுவீச்சில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.‌ மே 23-ஆம் தேதி வரை இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களையும் 70 டன் சரக்குகளையும் ஜாம்நகர், வாரணாசி, பாட்னா மற்றும் அரக்கோணத்திலிருந்து கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் போர்ட் பிளேயருக்கு ஏற்றிச் சென்றுள்ளது.

16 விமானங்களும், 26 ஹெலிகாப்டர்களும் உடனடித் தேவைக்காகத் தயார் நிலையில் உள்ளன. மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பிரிவின் பத்து படைகள் புவனேஸ்வருக்கும் கொல்கத்தாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளதோடு, ஐந்து குழுக்கள் போர்ட் பிளேயரில் தயார் நிலையில் உள்ளன. கிழக்குக் கடற்படை மற்றும் அந்தமான் நிக்கோபார் கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்கள், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவுவதற்கான மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணங்களுடன் தயாராக உள்ளன.‌ நான்கு நீச்சல் குழுக்கள் மற்றும் பத்து வெள்ள நிவாரணக் குழுக்கள், கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் சிலிகாவில் பொது நிர்வாகத்திற்கு குறுகிய காலத்தில் உதவிகளை வழங்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளன.

ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதனை எதிர்கொள்வதற்காக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏழு வெள்ள நிவாரண குழுக்களும் இரண்டு நீச்சல் குழுக்களும் வெவ்வேறு பகுதிகளில் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக, விமானப்படைக்கு சொந்தமான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் விசாகப்பட்டினம் மற்றும் போர்ட் பிளேயரில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகத் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.

எட்டு வெள்ள நிவாரணக் குழுக்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் மூன்று பொறியாளர் பணிக் குழுக்கள், பொது நிர்வாகத்தின்  அழைப்பிற்காக காத்திருக்கின்றன. பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்களின் நிர்வாகத்தினருடன் ஆயுதப்படை தொடர்பில் உள்ளது. கொவிட்- 19 சிகிச்சைக்காகவும், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிராணவாயுவை மருத்துவமனைகளுக்குதடையின்றி கொண்டு செல்வதற்காகவும் சாலை மற்றும் ரயில் இணைப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆயுதப்படை குழுக்கள் பணியாற்றுகின்றன.

புயலினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை எதிர்கொள்ளவும், உயிர்களை பாதுகாக்கவும் ஆயுதப்படை முழு அளவில் தயாராக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா