தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்.ஹிந்தி தொலைக்காட்சித் தொடரைத் தடை செய்ய மத்திய அமைச்சருக்குக் கடிதம்

தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகருக்கு "The Family Man Season 2" என்ற ‌ஹிந்தி தொலைக்காட்சி தொடரை தடை செய்யவேண்டுமென கடிதம் எழுதினார். மேலும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சரின் உத்தரவு படி பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட  பழங்குடி மக்களின் கிராமங்களிலே தனிமை படுத்தல் மையம் (Covid Quarantine Care Centres) அமைத்து மக்களின் அச்சத்தை போக்கி மக்களை கொரோனா  தொற்றிலிருந்து காப்பாற்ற அரசு மருத்துவர் கார்த்திக்  தலைமையிலான மருத்துவ குழுவினர் AWED தொண்டு நிறுவனக் குழுவினருடன் படகில் சென்று மலைவாழ் பழங்குடி இன மக்கள் கிராமங்களில் கொரனா தொற்று தடுப்பு பணிகளை மேற்கொண்டார். மலை வாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அதற்கு தீர்வு கண்ட  அமைச்சருக்கு பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்தனர்.    பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு கடந்த தேர்தலை விட 11485 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்ற திமுகவின் மனோதங்கராஜ் அவர்கள் தமிழகத்தின் முதல்வரால் தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு அமைச்சராக அறிவிக்கப்பட்ட செய்தியை அறிந்து மக்கள் மகிழ்ந்தனர். குமரி மாவட்டத்திற்கு விரைந்து வந்து பணிகளைச் செய்வார் என்று அவரை காண மிக ஆவலான நிலையில் கொரோனா என்ற கொடிய அரக்கன் எங்கள் அமைச்சரை இரண்டு வாரத்திற்கு மேல் கள பணி செய்ய விடாமல் கட்டி போட்டு விடவே கொரோனா தடுப்பு இன்று அதிரடியாக களத்திலிறங்கினார் முதல் நிகழ்வாக நாகர்கோவிலில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதற்கு முன்னாதாக அரசின் விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த அமைச்சருக்கு கன்னியாகுமரி மாவட்டக் காவல் துறை சார்பாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் வரவேற்புக் கொடுக்கப்பட்டது. இனிமேல் அதிரடியாக களத்தில் அமைச்சரை தினமும் காணலாம்.      அமைச்சர் இன்று மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற சந்திப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மழை பாதிப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்து, பணிகளை மேலும் துரிதப்படுத்த அறிவுறுத்தயுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா