சர்வதேச கொவிட் நிவாரண உதவிகள் பற்றிய அண்மைத் தகவல்கள.சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சர்வதேச கொவிட் நிவாரண உதவிகள் பற்றிய அண்மைத் தகவல்கள.

கொவிட் தொற்றின் பாதிப்பு பெரும் மடங்கு நாட்டில் உயர்ந்திருப்பதால் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் நிவாரண மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்கி வருகின்றன.

2021 ஏப்ரல் 27 முதல் மே 23 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் இணைந்து 17,755 பிராணவாயு செறிவூட்டிகள், 15,961 பிராணவாயு சிலிண்டர்கள், 19 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 12,913 செயற்கை சுவாசக் கருவிகள், சுமார் 6.9 லட்சம் ரெமிடெசிவிர் குப்பிகள் ஆகியவற்றை அனுப்பியுள்ளன.

2021 மே 22/23 அன்று  ஒன்டாரியோ (கனடா), இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா,  அமெரிக்க இந்திய கூட்டு மன்றம், புத்திஸ்ட் சங் (வியட்நாம்), எஸ்&ஜே சாரிட்டபிள் டிரஸ்ட் (இங்கிலாந்து) ஆகியவற்றிடமிருந்து  பெறப்பட்ட முக்கியப் பொருட்கள்:

• பிராணவாயு செறிவூட்டிகள்: 1,125

• செயற்கை சுவாசக் கருவிகள்: 1,397

கூடுதலாக, கையுறைகளும், தொற்று மாதிரிகளைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் உபகரணமும் அனுப்பி வைக்கப்பட்டன.

பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வழங்கப்படும் பொருட்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் துரிதகதியில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதனை பிரத்தியேக ஒருங்கிணைப்பு மையத்தின் வாயிலாக மத்திய சுகாதார அமைச்சகம் விரிவாகக் கண்காணித்து வருகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா