உழவர் சந்தை வியாபாரிகளின் நடமாடும் விற்பனை

தமிழகத்தின்
ஏழை - எளிய மக்கள், வீட்டில் உணவு சமைக்க முடியாத சூழலில் இருப்பவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட யார் யாருக்கெல்லாம் உணவு தேவைப்படுகிறது என்பதை அறிந்து, இருக்கும் இடம் தேடிச்சென்று உதவிடுமாறு அறிக்கையொன்றில், முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். மாவட்டத்தில் முழு ஊரடங்கு நாட்களில் காய்கறிகளை மக்கள் வசிப்பிடத்திற்கு சென்று விற்பனை செய்ய உழவர் சந்தை விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மே மாதம் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களான பால் விற்பனை மருந்துக்கடை பொருட்கள், பெட்ரோல் நிலையங்கள்  மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் வைத்து காய்கறி விற்பனை செய்ய முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு உங்கள் வீடு தேடி காய்கறிகள் வரும் என அறிவித்துள்ளது. அதன்படி உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்பவர்கள் இன்று முதல் மிதிவண்டி, இரு சக்கர வாகனம், சரக்கு வாகனங்களில் காய்கறிகளை மக்கள் குடியிருப்பு பகுதிக்குச் சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் காய்கறிக் கடை வைத்திருப்பதற்கான அடையாள அட்டை இருந்தால் போதுமானது. நடமாடும் காய்கறி அங்காடி குறித்த வருகையைத் தெரிந்துக்கொள்ள தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.                   நடமாடும் காய்கறி அங்காடி வருகை, விலை குறித்த தகவல்களை அறிய 9499932899 எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னை மரங்களுக்கு தண்ணீர் விட்டு, பாதுகாத்து பிறகு காய்த்த பிறகு கூலிக்கு ஆள் வைத்து காய்களை பறித்து வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்கும் விலை 7 முதல் 9 ரூபாய் வரை தான். ஆனால் மக்கள் வாங்கும் விலையோ 20 முதல் 25 வரை. இதில் யாருக்கு அதிக இலாபம் விளைவித்த விவசாயிக்கா அல்லது வியாபாரிக்கா? முடிவு நீங்களே எடுத்துக்கொள்ளவும். இதேதான் காய்கனிகளின் நிலையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா