புயலின் காரணமாக கிழக்கு மாநிலங்களில் ஆக்சிஜன் போக்குவரத்து செயல்பாடுகளை ரயில்வே அதிகரித்துள்ளது

இரயில்வே அமைச்சகம்  புயலின் காரணமாக கிழக்கு மாநிலங்களில் ஆக்சிஜன் போக்குவரத்து செயல்பாடுகளை ரயில்வே அதிகரித்துள்ளதுஅனைத்து சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே தொடர்ந்து கொண்டு சேர்த்து வருகிறது.

இது வரை சுமார் 17,239 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை 1042 டேங்கர்களில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது.

263 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் தங்களது பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், தேவையுள்ள மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை மிகவும் குறைந்த கால அவகாசத்தில் கொண்டு சேர்ப்பதை இந்திய ரயில்வே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த செய்திக் குறிப்பு தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், 2 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எட்டு டேங்கர்களில் 134 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை எடுத்து சென்று கொண்டிருக்கின்றன.

புயல் வலுவடைவதற்கு முன்னதாக, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட்டில் இருந்து கடந்த 12 மணி நேரத்தில் 680  மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராண வாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் எடுத்து வந்துள்ளன. இந்த் பகுதியில் இருந்து 8 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்களில் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டுள்ளன.

தென் மாநிலங்களை பொருத்த வரை, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலங்கானாவிற்கு தலா 1000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இது வரை 1099 மெட்ரிக் டன் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா