ஊரடங்கு முடிந்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து நூலகங்களும் இயங்க அரசு அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, வரும் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. முதற்கட்டமாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நூலகங்கள் இயங்கலாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு அமைப்புகள் சார்பில் நூலகங்களைத் திறக்கக் கோரிக்கை வைத்துள்ளதாக பொது நூலகத்துறை இயக்குநர் அரசுக்குக் கடிதமெழுதியுள்ளார். நூலகத்துறை இயக்குநரின் கடிதத்தின் பேரில் அரசு பரிசீலித்து, பகுதி நேர நூலகங்கள் தவிர மற்ற நூலகங்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.விவரம்:
கன்னிமரா, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், முழு நேர கிளை நூலகங்களில் உள்ள புத்தகங்கள் எடுத்துக் கொடுக்கும் பிரிவு, பரிந்துரை புத்தகங்கள் உள்ள பிரிவு, சொந்த புத்தகங்களை படிக்கும் பிரிவுகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
புத்தகங்களை வாசகர்கள் சுற்றுக்கு வழங்கும் பிரிவுகள் கிளை நூலகங்கள், கிராம நூலகங்களில் மட்டும் இயங்கலாம்.
நூலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரைதான் செயல்பட வேண்டும்.
கிளை நூலகங்கள், கிராம நூலகங்கள் வழக்கமான பணி நேரமான மதியம் 2 மணிவரை இயங்கலாம்.
பகுதி நேர நூலகங்கள் திறக்க அனுமதியில்லை. அனைத்து நூலகங்களிலும் நாளிதழ்கள் பிரிவுக்கு வாசகர்கள் அனுமதிக்க கூடாது.
நூலகர்கள், நூலகப் பணியாளர்கள் முகக் கவசம் மற்றும் கையுறைகளை அவசியம் அணிய வேண்டும்.
வாசகர்கள் கேட்கும் நூல்களை நூலடுக்குகளிலிருந்து, நூலகப் பணியாளர்கள் தான் எடுத்துக் கொடுக்க வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நூலகங்களில் அனுமதியில்லை.
5 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் நூலகத்தில் அனுமதி இல்லை. கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள நூலகங்கள் ஊரடங்கு முடியும் வரை திறக்க அனுமதியில்லை. மேலும் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நபர்கள் அந்த நூலகங்களில் சென்று படிக்க அனுமதியில்லை.
நூலகங்களில் குளிர் சாதன வசதிகளுக்கு அனுமதியில்லை.
சொந்தப் புத்தகங்களை எடுத்து வந்து படிப்போர் தங்கள் புத்தகங்கள் மற்றும் லேப்டாப்களை மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. மேலும் அந்தப் பிரிவிலிருந்து நூலகத்தின் வேறு பிரிவுகளுக்கு எந்தப் பொருளும் எடுத்துச் செல்லக் கூடாது.
புத்தகம் படிக்கும் பிரிவில் குழுவாக அமர்ந்து ஆலோசிக்கவோ விவாதிக்கவோ அனுமதிக்க கூடாது.
நூலகங்களுக்கு வரும் வாசகர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை சிறு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்த பிறகு, நூலகப் பணியாளர்கள் அந்த புத்தகங்களை எடுத்து வந்து கொடுக்க வேண்டும்.
நூலகங்களுக்கு வருவோரில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் புத்தகம் படிக்கும் பிரிவு மற்றும் பரிந்துரை நூல்கள் பிரிவுக்கு அனுமதிக்க வேண்டும். மேற்கண்டவை தவிர அரசு அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நூலகங்களில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நூலகங்களுக்கு வருவோர் கண்டிப்பாக தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி நூலகங்களிலும் முரசொலி பத்திரிக்கை உட்பட மூன்று தினசரி நாளிதழ் வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் 27-05- 2021 ஆம் தேதி நடைபெற்ற காணொளிக்காட்சி அறிவுரையின்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி நூலகத்திற்கும் 01-06-2021 முதல் தினமும் மூன்று தினசரி நாளிதழ்கள் வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக முரசொலி நாளிதழ் ஒரு வருட சந்தா ஒரு நூலகத்திற்கு ஆயிரத்து 800 ரூபாயை முரசொலி சென்னை என்ற முகவரிக்கு வங்கி வரைவோலையாக பெற்று இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மற்ற இரண்டு நாளிதழ்களை உள்ளூர் முகவர்களிடமிருந்து பெற்று பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டி உள்ளதால் ஊராட்சி ஒன்றிய பொது நிதி கணக்கு எண் ஒன்றிலிருந்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும், மேலும் இத்தொகை ஊராட்சிக் கணக்கிலிருந்து பெற்று ஈடுசெய்ய அறிவுறுத்தப்படுகிறதென தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்கள், ஊர்கள் அனைத்திலும் நூலகங்கள் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் செயல்படுகின்றன.
தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948 ன் படி, நிறுவப்பட்ட பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 1972 ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகமெங்கும் பின்வரும் நூலகங்கள் செயல்படுகின்றன
கன்னிமாரா பொது நூலகம் , அண்ணா நூற்றாண்டு நூலகம் மாவட்ட மைய நூலகங் 32 கிளை நூலகங்கள் 1926 நடமாடும் நூலகங்கள் 14 ஊர்ப்புற நூலகங்க 1915 பகுதி நேர நூலகங்கள் 745 என மொத்தம் 4634 உள்ளன.
கருத்துகள்