தமிழ்நாட்டில் 18 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் 18 இந்திய ஆட்சிப் பணி  அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்.அதிகாரி விபு நாயருக்கு சிறப்பு திட்டங்கள் துறையின் முதன்மைச் செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளராக மங்கத்ராம் சர்மாவுக்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

இராமநாதபுரத்திற்கு இரண்டாவது புதிய பெண் ஆட்சியர் நியமனம்

 இராமநாதபுரம் மாவட்டக் கலெக்டராக அறிவிக்கப்பட்டிருந்த கோபால சுந்தர்ராஜ் தற்போது தென்காசி மாவட்டக் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்


இராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக சந்திரகலா IAS நியமனம்    செய்யப்பட்டார்.தென்காசிமாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கும் திரு S. கோபாலசுந்தரராஜ்  இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மாவிலாதோப்பு கிராமத்தை சேர்ந்தவர். அவர் தொடக்கக் கல்வியை போகலூர் ஒன்றியம் சின்ன நாகாச்சியிலும் நடுநிலைப் பள்ளி கல்வியை மாவிலாதோப்பு நாடார் நடுநிலைப் பள்ளியிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை இராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். தற்போது மாவிலாதோப்பு நாடார் நடுநிலைப் பள்ளியின் கட்டிடம் அவர் தந்தை தானமாக கொடுத்த இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சம். மாவட்ட ஆட்சியர் சொந்த மாவட்டம் என்பதால் தென்காசி மாற்றம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்