கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதில் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்   வர்த்தக நோக்கங்களுக்காக இ-வின் தரவுகளைத் தவறாகப்பயன்படுத்துவதைத் தவிர்ப்பதில் மத்திய அரசு உறுதி“முழுமையான அரசின் அணுகுமுறையின்” கீழ் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல்  தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஆதரவளித்து வருகிறது. நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசிகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேமிப்பு உள்ளிட்ட விநியோக சங்கிலியை சீரமைக்கும் பணிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மின்னணு புலனறிதல் இணைப்பு தடுப்பூசி முறையின் (இ-வின்) இருப்புநிலை மற்றும் வெப்பநிலை தரவு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதியுள்ள கடிதம் பற்றி ஒரு சில ஊடகங்கள் விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளன.

வணிக நோக்கத்திற்காக, பல்வேறு முகமைகள் இந்தத் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காகவே, இ-வின் மூலம் பெறப்படும் தரவுகள் மற்றும் தடுப்பூசிகளின் இருப்பு பற்றிய தகவல்களையும், அவை சேமிக்கப்படும் வெப்பநிலை பற்றிய தகவல்களையும் வெளியிடுவதற்கு முன்பு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அனுமதியை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பெறவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலகளாவிய தடுப்பூசித் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு தடுப்பூசிகளுக்கான குறிப்பிட்ட பயன்பாட்டு நிலவரம் தொடர்பான முக்கிய தகவல்களும், ஒவ்வொரு தடுப்பூசியை சேமிப்பதற்கு தேவையான வெப்பநிலை தொடர்பான தரவுகளும் ஏராளமான தடுப்பூசிகள் மற்றும் குளிர் சாதன உபகரணங்களின் ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களில் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.

உலகளாவிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் ஆறு வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கு இ-வின் என்ற மின்னணு தளத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பயன்படுத்துகிறது. தடுப்பூசியின் கையிருப்பு மற்றும் சேமிப்பு, வெப்பநிலை தொடர்பான இ-வின் தரவுகளை வெளியிடுவதற்கு சுகாதார அமைச்சகத்தின் முன்அனுமதி அவசியம்.

கொவிட்-19 தடுப்பூசிகளின் கையிருப்பு, பயன்பாடு மற்றும் மீதமுள்ளவை குறித்தத் தகவல்கள் கோவின் தளத்தில்  பதிவேற்றம் செய்யப்படுவதுடன், வாராந்திர ஊடக சந்திப்பு மற்றும் அன்றாட செய்தி அறிக்கைகளின் வாயிலாக ஊடகத்திற்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படைத்தன்மையுடன் இந்தத் தகவல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

முறையில்லா வர்த்தக நோக்கங்களுக்காக இது போன்ற உணர்வுப்பூர்வமான தரவுகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் நோக்கத்துடனேயே மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியது.

கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதில் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. எனவேதான் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த முறையில் தடுப்பூசி தளவாடங்கள் பற்றி பயனாளிகளுக்குத் தெரிவிப்பதற்காக கோவின் தளம் உருவாக்கப்பட்டது. சீரான இடைவெளியில் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பதே இதன் நோக்கமாகும்.சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 146-வது நாள்: 24.58 கோடி டோஸ்கள் இது வரை வழங்கப்பட்டுள்ளன

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 24.58 கோடிக்கும் (24,58,47,212) அதிகமான தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி உள்ளது.

18-44 வயது பிரிவில் 18,64,234 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 77,136 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 3,58,49,328 பேர் முதல் டோசையும், 4,84,740 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை பெற்றுள்ளனர்.

பிகார், தில்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவிட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 2007665 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 5265 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 50340 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் 146-வது நாளில் (2021 ஜூன் 10), 30,32,675 டோஸ்கள் வழங்கப்பட்டன. இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 27,33,087 பேருக்கு முதல் டோசும், 2,99,588 நபர்களுக்கு இரண்டாவது டோசும் வழங்கப்பட்டன. இறுதி அறிக்கைகள் இன்றிரவு நிறைவு செய்யப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்