மேற்கு வங்கத்திலிருந்து நேபாளத்திற்கு 24 மெட்ரிக் டன் நிலக்கடலை ஏற்றுமதி

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்   மேற்கு வங்கத்திலிருந்து நேபாளத்திற்கு 24 மெட்ரிக் டன் நிலக்கடலை ஏற்றுமதி
கிழக்குப் பகுதியிலிருந்து  நிலக்கடலைகளை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஊக்குவிக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் இருந்து 24 மெட்ரிக் டன் நிலக்கடலை நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட சரக்குகளை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தில் (அபெடா) பதிவு செய்யப்பட்டுள்ள கொல்கத்தாவில் உள்ள லடுராம் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்தது.

2020-21 ஆம் ஆண்டில் 6.38 லட்சம் டன் (ரூ. 5381 கோடி மதிப்பில்) நிலக்கடலைகளை இந்தியா ஏற்றுமதி செய்தது. இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, சீனா, ரஷ்யா, உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு நிலக்கடலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நிலக்கடலைகளை வாங்குபவர்களின் முன்பதிவு, பதிவு செய்யப்பட்ட அபெடா நிலக்கடலைப் பிரிவுகளின் தொகுதி செயலாக்கம், ஏற்றுமதி சான்றிதழ் மற்றும் சரக்குகளை ஏற்றுவதற்கான சான்றிதழுக்கு ஏற்றுமதியாளரின் விண்ணப்பம், அஃப்லாடாக்சின் என்ற பூசண நச்சு வகையின் ஆய்வு மற்றும் சரக்குகளை ஏற்றுவதற்கான சான்றிதழை ஆய்வகங்கள் அளிப்பது, அபெடா நிறுவனத்தால் அளிக்கப்படும் ஏற்றுமதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதி சார்ந்த நடவடிக்கைகள், peanut.NET போன்ற முன்முயற்சிகளின் வாயிலாக முறைப்படுத்தப்பட்டுள்ளன.

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் எண்ணெய் வித்து உற்பத்தியின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி 2019-20ஆம் ஆண்டின் மதிப்பீடான 99.52 லட்சம் டன்னிற்கு எதிராக  2020-21 ஆம் ஆண்டில், நிலக்கடலைகளின் உற்பத்தி 101.19 லட்சம் டன்னாக இருக்கும்.

தேசியளவில் நிலக்கடலைகளின் உற்பத்தியில் குஜராத் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் நிலக்கடலைகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தக் குறிப்பிட்ட பயிர், காரீப் மற்றும் ராபி பருவங்களில் வளர்கிறது. மொத்த உற்பத்தியில் காரீப் பருவத்தின் பங்கு சுமார் 75% ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்