சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு வந்த அன்றே.வடபழநி திருக்கோவிலுக்குச் சொந்தமான ரூபாய்.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி, சென்னை சாலிகிராமத்திலுள்ள காந்திநகரில், வடபழநி முருகன் திருக்கோவிலுக்குச் சொந்தமான ரூபாய்.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் இன்று மீட்கப்பட்டது

. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுமென இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு.  தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் உள்ளன. இதில் 8,450 கோயில்கள் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் பிரதான கோவில்களாகும் 44 ஆயிரம் கோவில்களில் 32,932 நல்ல நிலையில் இருப்பதாகவும் 6,414 கோவில்களில் சிறு சீரமைப்புப் பணிகள் செய்ய வேண்டியதிருப்பதாகவும், 530 கோயில்கள் பாதி சிதிலமடைந்துள்ளதாகவும், 716 கோயில்கள் முழுமையாகவே சிதிலமடைந்துள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.பாதி மற்றும் முழுமையாக சிதிலமடைந்த கோவில்களை யுனஸ்க்கோ விதிகளின்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில். தொன்மையான கோவில்களைப் பாதுகாப்பது தொடர்பாக, 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவன் அடங்கிய அமர்வு இன்று ஜூன்  மாதம் 7 ஆம் தேதி இல் வழக்கில் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. தமிழக அரசுக்கும், மத்திய தொல்லியல் துறைக்கும் கிட்டத்தட்ட 75 உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.  தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான கோவில்களைப் பாதுகாக்க வேண்டும்.     தமிழகம் முழுவதுமுள்ள கோவில்களின் பட்டியலைத் தயாரித்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும். கோயில்களிலுள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாகத் தயாரிக்க வேண்டும். கோயில்களில் வலுவான அறை அமைத்து சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகள், நகைகள் புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும். கோவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க வேண்டும். கோயில் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும். கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும், மத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும், கோவில்களுக்கு சொந்தமான நீர்நிலைகளையும் பாதுகாத்தல், கோவில் நிலங்கள், சொத்துக்களை திருடியவர்கள், சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து மத்திய சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோவில் நிர்வாகம் தொடர்பான வழக்கின் உத்தரவுகளை மூன்று மாதத்திற்குள் அமல்படுத்த உத்தரவிட்ட நிலையில். வடபழநி கோவில் சொத்துக்கள் மீட்பு; பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வாகும் பத்தாண்டு வேடிக்கை பார்த்த அதிகாரிகள் தற்போது சுறுசுறுப்பு காட்டி

வடபழநி முருகன் கோவில் சொத்துக்கள் தனியார் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. ரூ.250 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டன. பல ஆண்டுகால பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிறது. முதல்வர் அதிரடி உத்தரவால் தூங்கி கொண்டிருந்த  சில ஊழல் அதிகாரிகள் சுறுசுறுப்படைந்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்தில் முதன் முறையாக சென்னை வடபழநி கோவில் சொத்துக்கள் மீட்க முடிவு செய்யப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சேகர் பாபுவுக்கு அதிரடி உத்தரவிட்டார் முதல்வர் கடுமையான உத்தரவின் பேரில் இந்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு மீட்பு மற்றும் சீரமைப்புகள் நடைபெற துவங்கி இருக்கிறது. அதன் முதல்படியாக தமிழகம் முழுவதும் கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன

முதல்வர் உத்தரவின்படி இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு களம் இறங்கினார். இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில்; தனியார் சம்பாதிப்பதை கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது. இதனை தடுக்க காவல் துறை, மாநகராட்சி, அறநிலைய துறை இணைந்து இன்று வடபழநி கோயில் நிலங்களை மீட்டுள்ளோம். சாலிகிராமம், பகுதிகளில் வணிக நிறுவனங்கள், வாகன காப்பகங்கள், மற்றும் குடோன்கள் என பலரது வசமிருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இது டிரெய்லர் தான் இனி தான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள். மேலும் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். என அமைச்சர் தகவல்.

இது போன்ற ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகளை கண்டறிந்து இந்து சமய அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்வடபழநி கோவிலுக்குச் சொந்தமான இந்த இடம் பத்தாண்டுகளாக தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து வந்தன. கோவில் தொடர்பாக அறநிலைய துறையிடம் கேட்டபோது நிர்வாக ரீதியாக காரணம் கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். கடந்த ஆளும் கட்சி நபர்களின் பிடியிலிருந்தததால் இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இது போல் இனியும் நடக்காமல் இருக்க இந்த ஆக்கிரமிப்புக்கு காரணம் யார் என அறிந்து தற்போதைய அமைச்சரும், கமிஷனர் குமரகுருபரனும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் . இதுபோல் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவில் மற்றும் மருதீஸ்வரர் திருக்கோயில்களுக்கு உட்பட்ட திருமண மண்டபங்களை அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்த அமைச்சர் தகவல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்