இந்திய-இஸ்ரேல் வேளாண் திட்டத்தின் கீழ் 3 திறன்மிகு மையங்கள் கர்நாடகாவில் நிறுவப்பட்டது

விவசாயத்துறை அமைச்சகம்  விவசாயத்துறை அமைச்சகம்  இந்திய-இஸ்ரேல் வேளாண் திட்டத்தின் கீழ் 3 திறன்மிகு மையங்கள் கர்நாடகாவில் நிறுவப்பட்டதுதோட்டக்கலை துறையில் இஸ்ரேலிய தொழில்நுட்பங்களை முன்னெடுத்து செல்லும் விதமாக, இந்திய-இஸ்ரேல் வேளாண் திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் நிறுவப்பட்டுள்ள 3 திறன்மிகு மையங்களை அம்மாநில முதல்வர் திரு பி எஸ் எடியூரப்பா மற்றும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தனர்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் ஒரு பிரிவான எம்ஐடிஎச் மற்றும் சர்வதேச மேம்பாட்டு கூட்டுக்கான இஸ்ரேலிய முகமையான மாஷவ் ஆகியவை இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள 29 திறன்மிகு மையங்களை கொண்டு, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ற இஸ்ரேலிய வேளாண்-தொழில்நுட்பத்தை செயல்படுத்தி இஸ்ரேலின் மிகப்பெரிய அரசுகளுக்கிடையேயான கூட்டை வழிநடத்துகின்றன.

இந்த 29 திறன்மிகு மையங்களில்- கோலாரில் உள்ள மாம்பழத்திற்கான திறன்மிகு மையம், பாகல்கோட்டில் உள்ள மாதுளைக்கான திறன்மிகு மையம் மற்றும் தார்வாடில் உள்ள காய்கறிகளுக்கான திறன்மிகு மையம் ஆகியவை கர்நாடகாவில் செயல்பட்டு, அறிவை பெருக்கி, சிறந்த நடைமுறைகளை செயல்படுத்தி, அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சிகளை அளிக்கின்றன.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் திரு பி எஸ் எடியூரப்பா, தோட்டக்கலை பொருட்களின் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தக்கூடிய திறன்மிகு மையங்களை கர்நாடகாவில் நிறுவ நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி அளித்ததற்காக இந்திய மற்றும் இஸ்ரேலிய அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பேசுகையில், “சமீபத்திய மற்றும் புதுமையான இஸ்ரேலிய தொழில்நுட்பங்களுக்கான அணுகலை கர்நாடக விவசாயிகளுக்கு வழங்கி, அவர்களின் உற்பத்தி திறனை பெருக்க இந்த மையங்கள் உதவும். இதன் மூலம் அவர்களது வருமானம் பெருகும்,” என்றார்.

:

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்