இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் விழா: தொடர் இணைய கருத்தரங்குகள்புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் விழா: தொடர் இணைய கருத்தரங்குகள் நடத்துகிறது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவு கூறும் வகையில், இந்தியாவின் 75 ஆண்டு கால சாதனைகளை தெரிவிக்க ‘அம்ருத் மகோசவத்தை’  நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம் தனது சாதனைகளை தெரிவிக்க 75 வாரங்களுக்கு தொடர் இணைய கருத்தரங்கை நடத்துகிறது. 

இது தொடர்பாக 5 வார நிகழ்ச்சி, ‘தரநிலை மற்றும் தரகட்டுப்பாடு நடவடிக்கைகள்’ குறித்து ஜூன் முதல் அடுத்தாண்டு மார்ச் வரை தயார் செய்யப்பட்டுள்ளது.  இந்த இணைய கருத்தரங்குளில், முக்கிய தலைப்புகளில், நிபுணர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவர்.

தரநிலை மற்றும் தரகட்டுப்பாடு குறித்த இணையகருத்தரங்கு ஜூன் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து தொழில்நுட்பம் வாரியாக வார இணையகருத்தரங்குகள் நடத்தப்படும். சூரிய மின் சக்தி சாதனங்கள் குறித்த இணைய கருத்தரங்கு வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும். இன்வர்டர் மற்றும் பேட்டரியில்  சூரிய மின்சக்தி தொழில்நுட்பம் குறித்த இணைய கருத்தரங்கு வரும் நவம்பர் மாதம் நடத்தப்படும். சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலைகள் குறித்த இணைய கருத்தரங்கம் அடுத்தாண்டு ஜனவரியில் நடத்தப்படும். பயோகேஸ் ஆலைகள்/மின் கருவிகள் குறித்த இணைய கருத்தரங்கு அடுத்தாண்டு மார்ச் மாதம் நடத்தப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்