கயா ராணுவப் பயிற்சி மையத்தில் 89 வீரர்களும் 425 வீரர்கள் டேராடூனிலுள்ள இந்திய ராணுவ மையத்திலும் பயிற்சியை நிறைவு செய்தார்கள்

பாதுகாப்பு அமைச்சகம் இந்திய ராணுவ மையத்தில் பயிற்சியை நிறைவு செய்தனர் 425 வீரர்கள்

148 வழக்கமான படிப்புகள், 131 தொழில்நுட்பப் படிப்புகளைச் சேர்ந்த வீரர்களும், 9 நட்பு நாடுகளின் 84 வீரர்களுமாக மொத்தம் 425 வீரர்கள் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ மையத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இதற்கான நிகழ்ச்சி இன்று (ஜூன் 12, 2021) கொவிட்- 19 நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது.

பிறருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உற்சாகம் மற்றும் ஆர்வத்துடன் வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபட்டனர். மேற்குப் பிராந்திய தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர் பி சிங் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார்.

இளம் வீரர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒழுக்கம் மற்றும் உயர்தர பயிற்சியைக் குறிக்கும் வகையில் சிறப்பான அணிவகுப்பு மற்றும் ஒருங்கிணைந்த பயிற்சி இயக்கங்களை வெளிப்படுத்தியமைக்காக பயிற்சியாளர்களுக்கும் வீரர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். நாட்டிற்கு சேவையாற்றும் உன்னத பணியைத் தேர்வு செய்ய தங்கள் குழந்தைகளுக்கு ஊக்கமளித்த பெற்றோருக்கும் அவர் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.

பயிற்சியின்போது சிறந்து விளங்கிய ராணுவ வீரர்களுக்குப் பதக்கங்களை வழங்கி அவர் கவுரவித்தார். மற்றும்

கயா ராணுவப் பயிற்சி மையத்தில் 89 வீரர்கள்பயிற்சியை நிறைவு செய்தனர்

பிகார் மாநிலம் கயாவில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் 89 வீரர்கள் (20 சிறப்பு அதிகாரிகள்-46 படிப்புகள், தொழில்நுட்ப நுழைவு திட்டத்தைச் சேர்ந்த 60 வீரர்கள்- 43 படிப்புகள் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த 9 பேர்) இன்று (ஜூன் 12, 2021) பயிற்சி நிறைவு செய்து கொவிட் நெறிமுறைகளுக்கு உட்பட்டு அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

செகந்திராபாத்தில் உள்ள மின்னணு மற்றும் இயந்திர பொறியியல் ராணுவக் கல்லூரியின் பயிற்சிப் பிரிவு, மௌவில் உள்ள தொலைத்தொடர்பு பொறியியல் ராணுவக் கல்லூரி, புனேவில் உள்ள ராணுவப் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் தொழில்நுட்ப நுழைவு திட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பட்டப்படிப்பை மேற்கொள்வார்கள்.

கயா ராணுவப் பயிற்சி மையத்தின் படைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜி ஏ வி ரெட்டி, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

சிறந்த அணிவகுப்பு மரியாதையை வழங்கிய வீரர்களைப் பாராட்டிய படைத்தலைவர், சுயநலம் இல்லாத அர்ப்பணிப்புடனான நிபுணத்துவம் வாய்ந்த தங்களது சேவையின் மூலம் நாட்டிற்கும் தாங்கள் பயிற்சி பெற்ற மையத்திற்கும் பெருமை சேர்க்குமாறு அதிகாரிகளைக்  கேட்டுக் கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்