தன்னைத்தானே கடவுளின் அவதாரம் எனக் கூறிவரும் சிவசங்கர் பாபா
சிவசங்கர் என்ற நபர் 1949 ஆம் ஆண்டு நாராயண சர்மா மற்றும் விஜயலட்சுமி என்ற பிராமணக் குடும்பத்தில் அப்போது வட ஆர்காடு (வேலூர்) மாவட்டத்தில் தற்போது திருப்பதூர் மாவட்டத்தின் வானம்படி அருகே உள்ள ஆலங்கயம் கிராமத்த்தைச் சேர்ந்தவர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ராமராஜ்யம் எனும் பகுதி உருவாக்கி அவரின் பக்தர்களாக உள்ள ஒரு கூட்டத்திற்கு ஆசி வழங்கி வந்தார். இவர் தவறான நபர் என முன்பே யாகவா முனிவர்
தொலைக்காட்சி விவாதங்களில் நிரூபித்த நிகழ்வு திரைப்பட நடிகர் விவேக் நடித்து கேளிக்கையானது கடந்த காலம் தங்களை இந்துச் சாமியார் கடவுளின் அவதாரம் எனக் கூறும் போதே இந்தச் சாமியார் தவறான வர் என்பதை உணராத உயர் குடி மக்கள் அடித்தள மக்கள் யாரும் இவரை பார்க்கவில்லை இப்படி போலியான சாமியார் நமது சமூகத்தில் சீர்கேடுகள் நடக்கக் காரணமாகிறார்கள். குறிப்பாக பள்ளி சிறுமிகளிடம் தான் கடவுளின் அவதாரம் என்று கூறி மூளைச்சலவை செய்து அவர்களிடம் அத்துமீறியதாகவும் சிவசங்கர் பாபா தன்னை கிருஷ்ணன் என்று அழைத்துக் கொண்டு சிறுமிகளை கோபிகா என்று மூளைச்சலவை செய்து அவர்களுடன் பாலியல் சீண்டலில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குழந்தைகள் நல ஆணையம் தற்போது விசாரணை செய்து வருகிறது என்பதும் ஒவ்வொரு குழந்தைகளிடமும் தனித்தனியாக விசாரணை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளன. சிவசங்கர் பாபா மீது பாலியல் வழக்கு தொடர தகுந்த முகாந்திரம் இருப்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு தேடல் துவங்கியது சென்னை கே.கே நகர் பத்ம சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியரின் பாலியல் விவகாரம் தொடர்ந்ததை அடுத்து சமூக வலைத்தளங்களில் பல பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் மீது மாணவிகள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஆன்லைனில் வரும் இந்த புகார்களை எல்லாம் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டுமென தமிழக முதல்வர் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததன் தொடர்ச்சியாக கேளம்பாக்கத்திலிருக்கும் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது பல மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்தனர். அது தொடர்பான ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தனர். குறிப்பாக முன்னாள் மாணவிகள் பலரும் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்பது குறித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக குற்றச்சாட்டை தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்த நேரத்தில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் சம்மன் அனுப்பி சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளை அழைத்து விசாரணை நடத்தியது. ஆனால் அப்போது பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா நேரில் ஆஜராகவில்லை. வட மாநிலங்களில் தப்பியோடி உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனில் அவர் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சையிலிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் குற்றஞ்சாட்டும், மாணவிகள் நேரடிப் புகாரும் அளித்தன் அடிப்படையில் முக்கிய குற்றவாளி சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் நேரிடையாகப் பள்ளியில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பள்ளி வார்டன், ஆசிரியர், நிர்வாக ஆலுவலர்களிடம் விசாரணை நடத்தப்படும் நிலையில் முக்கிய குற்றவாளியான போலிச்சாமியார் சிவசங்கர் வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பாலியல் புகாரில் சிக்கியுள்ள நபரை மாநிலம் விட்டு மாநிலம் சென்று விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தமிழக டிஜிபி திரிபாதி சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்