லடாக் யூனியன் பிரதேசத்தில் வன்தன் திட்டம் விரிவாக்கம்

பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் லடாக் யூனியன் பிரதேசத்தில் வன்தன் திட்டம் விரிவாக்கம்


வன்தன் திட்டம் அமலாக்கத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய பழங்குடியினர் கூட்டுறவு சந்தை வளர்ச்சி கூட்டமைப்பு(TRIFED) மாநில அளவில் பல இணையகருத்தரங்குகளை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக லடாக் யூனியன் பிரதேச குழுவினர் மற்றும் வன்தன் விகாஸ் கேந்திர அமைப்புகளுடன் இணைய கருத்தரங்கு நடத்தப்பட்டது. 

வன உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, வன்தன் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்தியதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, இந்த இணைய கருத்தரங்கில், லடாக் பகுதி மேலாளர் எடுத்துரைத்தார். ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, வன்தன் விகாஸ் கேந்திரங்களை அமல்படுத்தும் பணி விரைவாக நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வன்தன் விகாஸ் கேந்திரங்களின் கணக்கெடுப்புப்பணி முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சீரான இடைவெளியில் அடுத்தடுத்த கூட்டங்களை நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின் அடிப்படையில், வன்தன் விகாஸ் கேந்திரங்களின்  ஐந்து கட்ட திட்டங்களை முறைப்படுத்தி அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கருத்தரங்கில், வன்தன் விகாஸ் கேந்திரங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன.

மூத்த அதிகாரிகளுடன் நடைபெறும் இந்த இணைய கருத்தரங்கு தொடர்கள், நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடந்த மே 10ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைப்பெற்றது.

அனைத்து தரப்பினர் இடையே தொடர்பை ஏற்படுத்தி, நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், பழங்குடியினருக்கான திட்டங்களை திறம்பட அமல்படுத்துவதன் மூலம் அதிக பலனை பெறவும், இந்த இணைய கருத்தரங்குகள் ஒரு வாய்ப்பாக அமைந்தன.

இந்த திட்டமிட்ட நடவடிக்கைகளை திறம்பட அமல்படுத்துவதன் மூலம், பழங்குடியினரின் பொருளாதார முறையை மாற்றுவதை நோக்கி டிரைஃபெட் செயல்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்