ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய குழுவினருக்கு உதவ டோக்கியோ இந்திய தூதரகத்தில் தனிப்பிரிவு.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய குழுவினருக்கு உதவ டோக்கியோ இந்திய தூதரகத்தில் தனிப்பிரிவு.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொள்ளும் இந்திய வீரர்கள் மற்றும் குழுவினருக்கு தேவையான வசதிகள் செய்வது பற்றி தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விளையாட்டு வீரர்களின்

செயல்திறனை மேம்படுத்த பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் என முடிந்த அளவு அதிகளவிலான நபர்களை அனுப்ப விளையாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அமைச்சகம் அளவிலான குழுவை அனுப்ப வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் குழுவினருக்கு தேவையான உதவிகளை வழங்க, டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் ‘ஒலிம்பிக் திட்ட பிரிவு’ என்ற தனிப் பிரிவு உருவாக்கப்படுகிறது. இந்த பிரிவு, இந்திய குழுவினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்