தேவையின் அடிப்படையில் தொலை வேளாண் ஆலோசனைகள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பம்        ‘தேவையின் அடிப்படையில் தொலை வேளாண் ஆலோசனைகள்’: வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய மன்றம், இந்திய மின்னணுக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து


விவசாயிகளுக்கு குறிப்பிட்ட இடத்தில் ‘தேவையின் அடிப்படையில் தொலை வேளாண் ஆலோசனைகளை' வழங்குவதற்காக வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய மன்றம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்திய மின்னணுக் கழகம் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (ஜூன் 9, 2021) கையெழுத்திட்டன.

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் செயலாளரும், வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய மன்றத்தின் இயக்குநருமான  டாக்டர் திரிலோசன் மொகாபாத்ரா, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் கூடுதல் செயலாளரும், வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய மன்றத்தின் செயலாளருமான  திரு சஞ்சய் குமார் சிங், இந்திய கழகத்தின் மேலாண் இயக்குநரும், தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியுமான திரு அபிஷேக் சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

தற்போது பயன்படுத்தப்படும் இந்திய மின்னணுக் கழகத்தின் கலந்துரையாடும் தகவல் விநியோக அமைப்புமுறையை வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய மன்றத்தின் கிசான் சாரதி திட்டத்துடன் ஒருங்கிணைத்து, அதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏராளமான விவசாயிகளைச் சென்றடைவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

உள்ளூர் அளவில் பல்வேறு விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு- ஊடக,  பலவகை ஆலோசனைகள் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புமுறையை உருவாக்கி இயக்குவதற்கு தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் தளங்களை உருவாக்க வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய மன்றமும், இந்திய மின்னணு கழகமும் சம்மதம் தெரிவித்துள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்