எம்பெருமான் ஈசனருள் பெற்ற ஸ்ரீ வெள்ளை வேட்டி சித்தர் ஜீவசமாதி பீடம்.. ஆலய குடமுழுக்கு விழா

 "மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்

வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும்என்று பேணுவார்;

நம்கலம் கவிழ்ந்தபோது நாறும்என்று போடுவார்

எண்கலந்து நின்றமாயம் என்னமாயம்    ஈசனே....! எம்பெருமான் ஈசனருள் பெற்ற ஸ்ரீ வெள்ளை வேட்டி சித்தர் ஜீவசமாதி பீடம்..  ஆலய குடமுழுக்கு விழா                    "சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் வ.சூரக்குடி கிராமம் தேசிய நெடுஞ்சாலையருகிலுள்ள தோப்பூரணிப்  பகுதியில் நான்கு தலைமுறைக்கு முன்னால் குறுநில மன்னர் கோட்டையிருந்து வாழ்ந்ததற்கான அடிச்சுவடுகளின் சில அடையாளமுண்டு கோட்டைச்சுவர்களின் அடித்தளப்பகுதிகள் இன்னும் அடையாளச் சின்னங்கள் உள்ளது.

1942 ஆம் ஆண்டிற்கு முன்னர் இராமநாதபுரம் (சிவகங்கை அதாவது 1983 ஆம்  ஆண்டுக்குப் பின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம்) ஜில்லா திருப்பத்தூர் தாலுகாவில் ஆத்தங்குடி கிராமத்திலுள்ள சிவன் கோவிலில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சைவப்பிள்ளை  மணிவாசகம் என்ற மணிமுத்துப் புலவர் தமிழிசை  ஓதுவாராகப் பணிபுரிந்தாதார். சில காலம் கழித்து  வ.சூரக்குடி அருகிலுள்ள தோப்பூரணியில் தற்போது ஸ்ரீ வெள்ளை வேஷ்டி சித்தர் சுவாமிகள் ஆலயம் அமைந்துள்ள பகுதியிலுள்ள இடத்தை விலைக்கு வாங்கி அங்கேயே குடில் அமைத்துத் தங்கினார். பின் பூந்தோட்டம் அமைத்து தினசரி பூக்களைக் கட்டி அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு கொடுத்தும், தனது குடிலில் சிவனுக்கு பூஜைகள் செய்து வந்தார்கள்.

மணிவாசகம் அய்யா  சுற்றுவட்டார மக்களுக்கு சித்த வைத்தியம் மற்றும் இயற்கை வைத்தியம் செய்து நோய்களைக் குணப்படுத்தி வந்துள்ளார் அதனால் மக்களிடம் பிரசித்தமான நிலை அய்யா அவர்கள் தூய வெள்ளை வேஷ்டி எப்போதும் அணிந்திருந்ததால் வெள்ளை வேஷ்டி சித்தர் என்று அப்பகுதி மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.

சிவ வழிபாட்டிலும், பொதுத் தொண்டிலும் ஈடுபட்ட அய்யா மணிவாசகம் அவர்கள் 1947 ஆம் ஆண்டில் தற்போது கோயிலுள்ள இடத்திலேயே ஜீவசமாதியடைந்தார்கள்.

காரைக்குடி பர்மா காலனியில் வள்ளுவர் நகரில் குடியிருக்கும் வங்கியில் பணிசெய்து விருப்ப ஓய்விலிருக்கும் செல்லத்துரை கலா தம்பதியினர் 6.5.2007 அன்று ஆத்தங்குடியிலிருந்து காரைக்குடிக்கு குறுக்கு வழியில் தோப்பூரணி வழியாக வந்து கொண்டிருந்தபோது தோப்பூரணி குளக்கரையில்  பிள்ளையார் கோவில் ஆலமரத்தடியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க வ.சூரக்குடியைச் சேர்ந்த பெரியவர் ராமையா என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அந்த முதியவரை செல்லத்துரை-கலா தம்பதியினர் சந்தித்துப் பேசி கொண்டிருக்கும் போது தோப்பூரணியின் சம்பவங்களை அவர்களுக்கு கூறிவிட்டு என்னுடன் வாருங்கள் உங்களுக்கு ஓரு முக்கியமான இடத்திற்கு கூட்டிச்செல்கிறேன் என்று சொல்ல பக்கத்தில் புதர்களடர்ந்த  இடத்திற்கு கூட்டிச் சென்று இங்கே பாருங்கள் என்று அய்யா மணிவாசகம்   என்ற வெள்ளை வேஷ்டி சித்தர் அவர்களின் ஜீவ சமாதியைக் காட்டிய தும் கைகாட்டிய இடத்திலிருந்து 2 அடி உயரமுள்ள சிவலிங்கம் ஜோதி வடிவாக சிவா ரூபத்தில் அவர்களுக்கு காட்சியளித்த பகல் மணி 12.20 லிருந்து 12.40 க்குள் கோடை காலத்தில் ஜோதி வடிவத்திலிருந்து வந்த ஒளி இருவர் கண்களும் கூசும் அளவிற்கு சக்திவாய்ந்ததாக இருந்தது. இந்த நிகழ்ச்சி தம்பதியினர் இருவரையும் மெய்சிலிர்க்க வைத்து அவர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தியது. அவர்கள் ஜோதியை வழிபட்டு அதே நினைவுடன் வீடு திரும்பினர். அன்று இரவு முழுவதும் தம்பதியினருக்கு ஜோதி வடிவ ஒளி வந்துகொண்டே இருந்தது.

மறுபடியும் 3 நாட்கள் கழித்து தம்பதியினரை அந்த இடத்திற்கு செல்லும்படி ஒர் உள்ளுணர்வு தூண்ட தம்பதியினர் 10 ஜூலை 2007 அன்று தோப்பூரணி வந்தனர். ஜோதி வடிவம் தெரிந்த இடத்தைச் சுற்றி உள்ள முட்புதர்களை ஒரு பணியாளரை வைத்து சுத்தம் செய்தனர். 2 அடி உயரத்தில் காட்சியளித்த சிவலிங்கம் 3 இன்ச் அளவில் சிறிய சிவலிங்கமாகத் தெரிந்தது. சிவலிங்கத்திற்கு தம்பதினர் அபிஷேகம், பூஜை செய்து மஞ்சள்துண்டு கட்டியும் வழிபட்டார்கள். பின்னர் வ.சூரக்குடியின் அப்போதய ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களைச் சந்தித்து இவ்விபரங்களைச் சொல்லி அன்றுமுதல் ஸ்ரீ வெள்ளை வேஷ்டிச் சித்தர் சமாதியில் உள்ள சிவலிங்கத்திற்கு பூஜை புனஸ்காரங்களை இத்தம்பதியினர் செய்து வந்தார்கள்.

முதல் குரு பூஜை 11 நவம்பர் 2007 அன்று ஹோமம் செய்து அன்னதானத்துடன் சிறப்பாக நடத்தப்பட்டது. 2008,2009,2010 ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்து குரு பூஜைகள் சித்தர் அய்யாவுக்கு சிறப்பாக நடத்தப்பட்டன.

ஓவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி அன்று இரவு முழு பூஜை, நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆன்மீக அன்பர்கள் உதவியுடன் மார்ச் 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை மதியம் அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

2010 ஆம் ஆண்டு முதல் பௌர்ணமி பூஜை பகலிலும் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பொதுமக்களுக்கு பகல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

2011 ஆம் ஆண்டு முதல் அமாவாசை நாளிலும் பகலிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

தினமும் காலை 8 மணிக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. காலையில் கறந்த பசும்பாலில அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் காலை 11 மணிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரம் அன்று குருபூஜைகள் மே மாதம் 6 ஆம் தேதியன்று வருஷாபிஷேகமும் ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் தரிசனம் செய்ய வருவதற்கு

திருச்சிராப்பள்ளி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடியிலிருந்து சுமார் 7 கி.மீ

தொலைவில் இடது புறத்தில் ஆலமரங்களுக்கிடையில் தோப்பூரணியில் ஸ்ரீ வெள்ளைவேஷ்டி சித்தர் ஆலயம் அமைந்துள்ளது.

பேருந்து வசதி: (காரைக்குடி பழைய பேருந்து நிலையம்) காரைக்குடி நேமத்தான்பட்டி செல்லும் GBS மற்றும் KRM மினி பேருந்துகள்அரைமணிநேரத்திற்கு ஒருமுறை வருகிறது வெள்ளை வேஷ்டி சித்தர கோவில் நிறுத்தமும் கூப்பிடும் தூரத்தில் அய்யாவின் ஆலயம் உன்டு  புதுக்கோட்டையிலிருந்து பள்ளத்தூர் கானாடுகாத்தான் வழியாக வரலாம்.

நினைத்த காரியங்களை முடித்துக்கொடுக்கும் ஸ்ரீ வெள்ளை வேஷ்டி சித்தர் சுவாமிகளை ஒருமுறை நேரில் தரிசித்து சித்தரின் அருளைப் பெற்று வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெறுக.

வெள்ளை வேஷ்டி சித்தர் சுவாமிகள் அறக்கட்டளை, சார்பில் ஆலய புனரமைப்பு நிர்மாணம் செய்து தற்போது குடமுழுக்கு விழாவுக்கு நாள் குறித்து  சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன                     நிர்வாக அறங்காவலர் சார்பில் தொடர்புக்கு தொலைபேசி: 919788105493                         ஸ்ரீ வெள்ளை வேட்டி சித்தர் அய்யா ஜீவ சமாதி பீட ஆலயம் அறநிலையம் அமைத்த ஆற்றல்மிகு அறங்காவலர் வாழ்க பல்லாண்டு! வளர்க தொண்டு! எனயியம்பி....

"பலப்ரதம் பூர்வ ஜென்மாதி பாக்யம் சகஸ்த்த ஆலய பரிபாலனம் புனர் நிர்மானம்  நித்ய சிந்திதம் ராஜ்ய வல்லபம்  அய்யா பணி முடிக்கும் அருட்செல்வரனதுரை செல்லத்துரை தம்பதி சமேத வாசினம் ஜெய விஜயிபவது சத சம்ஸரம்"

-- என அணைவரும் ஆலய புனரமைப்புக்கு ஆதரவுக் கரம் கொடுப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்