துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியில் இந்தியாவின் விண்வெளி திறன் வெளிகாட்டப்படும்: டாக்டர் ஜித்தேந்திர.சிங் தகவல்

விண்வெளித்துறை துபாயில் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக கண்காட்சியில் இந்தியாவின் விண்வெளி திறன் வெளிகாட்டப்படும்: டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல்
துபாயில் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக கண்காட்சியில் இந்தியாவின் விண்வெளி திறன்  வெளிகாட்டப்படும் என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர்  டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

உலக கண்காட்சி, துபாயில் 2021 அக்டோபர் 1ம் தேதி முதல்  2022 மார்ச் 31ம் தேதி வரை நடைப்பெறுகிறது. இந்த கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன. விண்வெளி தொழில்நுட்பம்  உட்பட 11 கருப்பொருள்களில், இந்தியாவும் தனது தயாரிப்புகளை இதில் காட்சிக்கு வைக்கிறது.


‘‘மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குவதல் (Connecting Minds, Creating the Future)” என்ற தலைப்பில் இந்த கண்காட்சி நடக்கிறது.

இந்த கண்காட்சி குறித்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்கிடம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபை உறுப்பினர்கள் விளக்கினர். அதன்பின் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதிய இந்தியா, விண்வெளி வலிமையால் குறிப்பிடப்படுகிறது. உலக நாடுகளின் குழுவில் இந்தியாவை விண்வெளித்துறை முன்னணியில் நிறுத்தியுள்ளது. துபாயில் நடக்கும் உலக கண்காட்சியில் இஸ்ரோவின் சாதனைகளை வெளிப்படுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குதான்,  இந்தியாவின் விண்வெளித் திறமையை வெளிப்படுத்தி வரலாறு படைக்க வைத்தது.

திறன் பரிமாற்றத்துக்கு வழிவகுத்து இந்தியாவை தொழில்நுட்ப ரீதியாக முன்னேறச் செய்து தற்சார்பு நிலைக்கு மாற வழிவகுத்துள்ளது.

விண்வெளி தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் திறன் மற்றும் வெற்றிக்கதை, உலக நாடுகளுக்கும் ஊக்கம் மட்டும் அளிக்காமல், எதிர்கால விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களை எப்படி வகுப்பது என்ற குறிப்புகளையும் வழங்குகிறது.

பிரதமர்  திரு நரேந்திரமோடி தலைமையின் கீழ் உலக நாடுகள் அரங்கில், முக்கிய பங்காற்றும் நாடாக இந்தியா உருவாகியுள்ளது. விண்வெளித் திறன்களில் மேன்மையுடன் உள்ளதால், மிகப் பெரியளவில் பங்காற்றும் அளவுக்கு இந்தியா உயர்ந்துள்ளது பெருமை அளிக்கும் விஷயம். இந்தியாவின் சந்திராயன், செவ்வாய் கிரக திட்டம்,  மற்றும் இனி மேற்கொள்ளவுள்ள ககன்யான் ஆகிய திட்டங்கள் உலகத்தை இன்று ஈர்த்துள்ளன.

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதித்தது பிரதமரின் மிக முக்கியமான நடவடிக்கை. இது விண்வெளி சந்தையில், இந்தியா போட்டி போடும் வகையில் மாறுவதை உறுதி செய்யும் மற்றும் விண்வெளித் திட்டத்தின் பயன்கள் ஏழைகளுக்கும் சென்றடையும். இவ்வாறு டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்