சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் குறைதீர்வு கூட்டம்

சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் குறைதீர்வு கூட்டம்

வரும் 23.06.2021 அன்று மாலை நான்கு மணியளவில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002 வாயிலாக தபால் சேவைகள் அதாவது மணியார்டர் / பதிவுத்தபால் / சேமிப்பு வங்கி முதலிய சேவைகளை பெற்று வரும் பயனாளிகள், சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நேரிலோ, தபால் வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் (doannaroadhpo.tn@indiapost.gov.in) வாயிலாகவோ 20.06.2021 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002 என்ற முகவரிக்கு, ”குறைதீர்வு முகாம்” என்ற தலைப்பில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், 23.06.2021 அன்று மாலை நான்கு மணியளவில் பயனாளிகள் குறை தீர்வு முகாமில் நேரில் வந்தும் கலந்து கொள்ளலாம் என்று அண்ணாசாலை தலைமை அஞ்சலக அதிகாரி திரு எம்.ஸ்ரீராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்