குறைந்த செறிவுடன் கூடிய நச்சு உலோகங்களையும் துல்லியமாக கண்டறிகிறது பெங்களூர் ஐஐஎஸ்சி மையம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை குறைந்த செறிவுடன் கூடிய நச்சு உலோகங்களையும் துல்லியமாக கண்டறிகிறது பெங்களூர் ஐஐஎஸ்சி மையம்பெங்களூர் ஐஐஎஸ்சியில் அமைக்கப்பட்டுள்ள, தண்ணீர் பகுப்பாய்வு மையம், குறைந்த செறிவுடன் கூடிய நஞ்சு உலோகங்களையும் துல்லியமாக  கண்டறிகிறது.

பெங்களூர் ஐஐஎஸ்சியில் தண்ணீர் பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கருவிகள், 100 பிபிஎம் முதல் 10 பிபிடி வரை அடர்வு உள்ள உலோகங்கள் மற்றும் உலோக போலிகள் ஆகியவற்றை கண்டறியும். 

தண்ணீரில் மாசுக்களுக்கான காரணங்களை கண்டறிந்து தீர்வு காண்பதில் இது போன்ற மையங்கள் முக்கியமானது.

இயற்கையான தண்ணீரில் தனிமங்களின் செறிவுகளை துல்லியமாக கண்டறியும் மையங்கள், தரமான சுற்றுச்சூழல் மற்றும் புவி ரசாயண ஆராய்ச்சிக்கு முக்கியமாகும். இந்த பன்நோக்கு மையம், நாடு முழுவதும் தண்ணீரில் கரைந்துள்ள உலோகங்கள் மற்றும் உலோக போலிகளின் அளவை கண்டறிய உதவும்.

எஸ்டிஜி6 திட்டம்: நகர்ப்புற குடிநீர் திட்டத்தின் கீழ் இந்திய இரண்டாம் நிலை நகரங்களில் தண்ணீரின் தரத்தை கண்டறிவதற்கான பணிகள், ஐஐடி மும்பை, டாடா சமூக அறிவியல் மையம், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் மற்றும் ஐஐஎஸ்சி போன்ற மையங்களிடம், காரக்பூர் ஐஐடி தலைமையில்  வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆதரவு அளிக்கிறது.

இந்த தண்ணீர் பகுப்பாய்வு மையங்களில் பிளாஸ்மா மாஸ் ஸ்பெக்ட்ரோ மீட்டர், இரட்டை கண்டுபிடிப்பு திறனுடன் கூடிய பிளாஸ்மா ஆப்டிக்கல் எமிஷன் ஸ்பெக்டரோ மீட்டர்  போன்ற கருவிகள் உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்