மதுபானம் விற்ற காவல் பெண் ஆய்வாளர் உள்பட பலர் பணி நீக்கம்.

மதுபானம் விற்ற காவல் பெண் ஆய்வாளர் உள்பட பலர் பணி நீக்கம்.


ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக மதுபானம் விற்பதை தடுப்பதற்காக, காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் பகுதியில், சட்ட விரோதமாக பதுக்கிவைத்து, விற்கப்பட்ட 434 மதுபானப் பாட்டில்களை, மே மாதம் 8 ஆம் தேதி, காவல்துறை பறிமுதல் செய்தனர். அதை முறையாக வழக்குப் பதிவு செய்து, தொடர்புடைய நபரைக் கைது செய்யாமல், எச்சரித்து அனுப்பியுள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபானப் பாட்டில்களை, வேறொருவர் மூலம் விற்று, அந்தப் பணத்தை, காவல்நிலையத்தில் பங்கு போட்டுக் கொண்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார்,


உத்தரவின்படி, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., புகழேந்தி கணேசன் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் அனிதா கிரேசி, எஸ்.ஐ., ராஜ்மோகன், எஸ்.எஸ்.ஐ., துரையரசன், தலைமைக் காவலர் இராமமூர்த்தி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்