நபார்டு வங்கித் தலைவர் தமிழகம் வருகை

நபார்டு வங்கித் தலைவர் தமிழகம் வருகை
தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கியான நபார்டின் தலைவர் டாக்டர் ஜி ஆர் சின்தலா, வரும் 18 மற்றும் 19-ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார். 19-ஆம் தேதி, அவர் தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலினை சந்தித்து, பல்வேறு திட்டங்களுக்கு நபார்டு வங்கி அளிக்கும் ஆதரவு குறித்தும், ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஆதரவு கோரியும், கூட்டுறவுக் கடன் கட்டமைப்பு, நுண் கடன் நிறுவனங்கள் மற்றும் நபார்டு வங்கியின் இதர மேம்பாட்டு முன்முயற்சிகளை தமிழகத்தில் வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிப்பார்.

பல்வேறு வர்த்தக மேம்பாட்டு திட்டங்கள் பற்றி வர்த்தக வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நுண் கடன் நிறுவனங்கள் முதலியவற்றின் மூத்த நிர்வாகிகளுடன் நபார்டு வங்கியின் தலைவர் கலந்துரையாடுவார். திருவண்ணாமலையில் நபார்டு வங்கியால் ஊக்குவிக்கப்படும் விவசாய உற்பத்தி நிறுவனத்தையும் ஜூன் 18-ஆம் தேதி அவர் நேரில் பார்வையிடுவார்.

இந்தத் தகவலை சென்னை நபார்டு வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு எஸ் சந்திரமவுலி, செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்