உயர் அழுத்த நேரடி மின்சார அமைப்பு முறையின் அடிப்படையில் இந்தியாவின் முதல் மின்வலி ஆதார மாற்றி

எரிசக்தி அமைச்சகம் உயர் அழுத்த நேரடி மின்சார அமைப்பு முறையின் அடிப்படையில் இந்தியாவின் முதல் மின்வலி ஆதார மாற்றி


மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் இந்திய எரிசக்தித் தொகுப்புக் கழகம், மின்வலி ஆதார மாற்றி (விஎஸ்சி) அடிப்படையிலான உயர் அழுத்த நேரடி மின்சார (எச்விடிசி) அமைப்புமுறையான 320 கி.வா புகலூர் ( தமிழகம்)-திருச்சூர் (கேரளா) மின்சாரம் விநியோகத் திட்டத்தின் ஒருமுனை-I இன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் நம் நாட்டின் தென்பகுதியில் எரிசக்தி அமைப்புமுறை வலுவடைந்துள்ளது. ஒருமுனை-II திட்டத்தைக் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஒருமுனை-I திட்டம் தற்போது தொடங்கப்பட்டிருப்பதன் வாயிலாகத் தனது முழு கொள்ளளவில் இந்த எரிசக்தித் திட்டம் இயங்க உள்ளது.


ரூ.5070 கோடி செலவில் ராய்கர்-புகலூர்-திருச்சூர் 6000 மெகாவாட் உயர் அழுத்த நேரடி மின்சார அமைப்பு முறையின் ஓர் பகுதியான புகலூர்- திருச்சூர் உயர் அழுத்த நேரடி மின்சார அமைப்புமுறை, திருச்சூர் மின்வலி ஆதார மாற்றி உயர் அழுத்த நேரடி மின்சார நிலையத்தின் மூலம் கேரளாவிற்கு 2000 மெ.வா மின்சாரத்தை வழங்கும்.

இந்தத் திட்டத்தின் மூலம் மின்வலி ஆதார மாற்றி தொழில்நுட்பத்தை இந்திய எரிசக்தித் தொகுப்புக் கழகம், முதன்முறையாக இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்