மக்கள் எளிதான வகையில் புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம்

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் 


மக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை உடனடியாக தமிழக முதல்வரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் செயல்பட்டு வருகிறது. அவற்றைப் பயன்படுத்தி புகார்களை சமர்ப்பிக்கும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம்

தமிழக மக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ள முதல்வருடன் ஒரு நேரடி தொடர்பை உண்டாக்கும் விதத்தில் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உங்கள் ஊரில் உள்ள பொதுவான பிரச்சனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை மனுவாக அனுப்பலாம். இந்த மனு தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்றி தரும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மேற்கொள்ளும் நலத்திட்ட உதவிகள், செயல்பாடுகள் அனைத்திலும் கட்சியின் சின்னமோ, பெயரோ, புகைப்படமோ எதுவும் இடம்பெறவில்லை. அதே போல தான் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது உங்கள் புகார்களை முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம்
மூலம் தெரிவிக்க

http://cmcell.tn.gov.in/register.php மற்றும் http://cmcell.tn.gov.in/iogin.php என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.

இதில் உங்கள் புகார்களை தெரிவிக்க பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.

பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றி உங்கள் புகார்களை அனுப்பலாம்.

இதை விட எளிதான வகையில் புகார்களை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியும், தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தபால் மூலம் உங்கள் புகார்களை தெரிவிக்க, Chief Minister's Special Cell, Secretariat, Chennai – 600009, Phone No: 044-2567 1764, Fax No: 044-2567 6929 என்ற முகவரியும், cmcell@tn.gov.in என்ற மின்னஞ்சலும் கொடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்களை அரசு அதிகாரிகளை அரசியல்வாதிகள் மிரட்டினாலோ அல்லது நலத்திட்ட உதவிகளுக்கு உதவிகோரவோ , மின்னஞ்சல் Cmcell@tn.gov.in மற்றும் தலைமைச் செயலகம் தொலைபேசி எண் 044- 25671764 எண் தொடர்புக் கொள்ளவும்” என்று கூறியுள்ளார்.

"அரசு அதிகாரிகள் சிக்கினால் டிஸ்மிஸ்" தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ ஆ ப எச்சரிக்கை!

சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறுகளை செய்யும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உட்பட துறை ரீதியான நடவடிக்கை கூட எடுக்க நேரிடும். தவறுகள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதிகாரிகள் நேர்மையாக பணி செய்ய வேண்டும். அரசின் இலவச சேவைகளுக்கு இலஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் பணித்துறையில் எந்த நிலையில் பணியாற்றும் அலுவலராக இருந்தாலும், எந்த வகையான நிறுவனமாக இருந்தாலும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது தனியார் துறைகளும் நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடக்க வேண்டும். பொதுமக்களை அரசு அதிகாரிகளை அரசியல்வாதிகள் மிரட்டினாலோ அல்லது நலத்திட்ட உதவிகளுக்கு உதவிகோரவோ , மின்னஞ்சல் Cmcell@tn.gov.in மற்றும் தலைமைச் செயலகம் தொலைபேசி எண் 044- 25671764 எண் தொடர்புக் கொள்ளவும்” என்று கூறியுள்ளார்.அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரவும், லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தை அமைக்கவும், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. 

அந்த கமிட்டி  முன்பே அளித்த


பரிந்துரைகள் பலவற்றை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அப்போது வெளியிட்ட அரசாணை (Personnel and Administrative Reforms Department GO (ms) no.:24, 17.02.2010) உண்டு. பத்து வருடங்களுக்கு பிறகு தற்போது தான் அதற்கு விடியல் வந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்