நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்.

கோவிட்-19 நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான நிவாரண வைப்பீட்டுச் சான்றிதழ்களையும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கான உடனடி நிவாரணத் தொகையையும் அவரவர் பாதுகாவலர்களிடம் முதல்வர் வழங்கினார்.


தாயும் தந்தையுமாய் திமுக அரசு பரிந்து காக்கும் என்று கூறினார். பின் மதியம் ஆழ்வார்பேட்டை, லாயிட்ஸ் காலனி மற்றும் நந்தனத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்.

கோவிட்-19 காலத்தில் மக்களின்பெருநம்பிக்கையாய் திகழும் நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்களும் அரசின் நிவாரண உதவிகளும் தடங்கலின்றி கிடைக்கிறதா என பொதுமக்களிடம் பேசி உறுதிசெய்து கொண்டேன் எனத் தெரிவித்தார்.சென்னை, ராயப்பேட்டை நியாயவிலை கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு.

மக்களுக்கு உரிய வகையில் 14 வகை மளிகை பொருட்கள் சென்று சேர்கிறதா, 2000 ரூபாய் நிவாரணத் தொகை சரியாக கொடுக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்கள்.

நேற்று முதல் நியாயவிலைக் கடைகள் மூலமாக இரண்டாவது தவணை 2000 ரூபாயுடன் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவது  தரமானதாக இருக்கிறதா, உரிய வகையில் பணம் சென்று சேர்கிறதா என்பதை முதல்வர் நேரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்ததன்படி இன்று சென்னை ராயப்பேட்டை அமுதம் நியாயவிலைக் கடைக்கு திடீரென அவர் விசிட் செய்தார்.காட்சி மற்றும் அச்சு ஊடகங்களுக்குத் தகவல் சொல்லவில்லை

அவர் செல்வது முன்கூட்டியே ஊடகத்தினருக்கு தெரியப்படுத்தப்படவில்லை. முதல்வரின் கார் எங்கோ கிளம்பிச் செல்வதை அறிந்து கொண்டு முதல்வர் இல்லத்துக்கு வெளியே இருந்த பத்திரிகையாளர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்ற போது தான் ரேஷன் கடையில் திடீரென ஆய்வு நடத்துவது தெரிந்தது. ரேஷன் கடையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் போதிய அளவு மளிகை சரக்குகள் இருப்பு இருக்கிறதா என்பது பற்றியும் ஊழியர்கள் வந்துள்ளனரா என்பதை பற்றியும் நேரில் பார்த்து உறுதி செய்தனர். மேலும் அங்கு வந்திருந்த பொதுமக்கள் சிலருக்கு தங்கள் கைகளால் நிவாரணப் பொருட்களையும் பணத்தையும் வழங்கி கவலைப்பட வேண்டாம் எனக்  கூறி அனுப்பி வைத்தனர்.

முதல்வர் திடீர் விசிட்டால் ரேஷன் கடை வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது. ஊழியர்கள் பரபரப்புடன் வேகமாக வேலை செய்தனர். எப்போது எந்த ஊர் ரேஷன் கடைக்கு முதல்வர் வருவாரோ என்ற எதிர்பார்ப்பு காரணமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் நியாய விலைக் கடை பணியாளர்கள் துரிதமாக பணியாற்றத் தொடங்கியுள்ளனர். எனவே முதல்வர் இதுபோல அப்போது மக்கள் நலப் பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.                சமீபத்தில் முதல்வர் தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு பெண் மனு வழங்குவதற்கு விரும்பியதால் நடுரோட்டில் காரை நிறுத்தச் சொல்லி அந்தப் பெண்மணியிடம் மனு வாங்கினார். இதுவும் மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

முதல்வரான பின்பும், மக்களோடு மக்களாக அவர் கலந்து பழகுவது வரவேற்பைப் பெறுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்