மும்பை டாடா மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் சிஏஆர்-டி செல் சிகிச்சைக்கு உயிரிதொழில்நுட்பத்துறை ஆதரவு
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மும்பை டாடா மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் சிஏஆர்-டி செல் சிகிச்சைக்கு உயிரிதொழில்நுட்பத்துறை ஆதரவு

மும்பை டாடா மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்ட சிஏஆர்-டி செல் சிகிச்சை   உயிரிதொழில்நுட்பதுறை ஆதரவு தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை, மும்பை ஐஐடி குழு ஆகியவை இணைந்து, புற்றுநோய்க்கான  முதல் சிஏஆர்-டி செல்  சிகிச்சையை, எலும்பு மஞ்சை மாற்று மையத்தில் கடந்த 4ம் தேதி வெற்றிகரமாக மேற்கொண்டன. இதனால் இந்த நாள் டாடா நினைவு மருத்துமனைக்கும், மும்பை ஐஐடிக்கும் வரலாற்று சிறப்புமிக்க நாளாக கருதப்படுகிறது.  இது ஒரு வகையான மரபணு சிகிச்சை. இதற்காக சிஏஆர்-டி செல்கள் மும்பை ஐஐடியின் உயிரி அறிவியல் மற்றும் உயிரிபொறியியல் துறையில் (BSBE) உருவாக்கப்பட்டன.

இந்த ஆய்வுப் பணிக்கு உயிரிதொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலின்(BIRAC) பேஸ் திட்டத்தின் கீழ் ஒரு பகுதி நிதியுதவி அளிக்கப்படுகிறது.  இந்தக் குழுவினர் தங்கள் ஆய்வு திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்டப் பரிசோதனைகளை மனிதர்களிடம் மேற்கொள்ள, உயிரி தொழில்நுட்ப துறை மற்றும் பிராக் ஆகியவை தேசிய பயோபார்மா திட்டம் மூலம் ரூ.19.15 கோடி நிதியுதவி அளிக்கின்றன. இந்த மரபணு சிகிச்சை இந்தியாவில் முதல் முறையாக மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்