‘ஸ்வாமித்வா’ திட்டத்துக்கு ட்ரோன் பயன்படுத்த சர்வே ஆப் இந்தியாவுக்கு நிபந்தனையுடன் கூடிய விலக்கு


உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்  ‘ஸ்வாமித்வா’ திட்டத்துக்கு ட்ரோன் பயன்படுத்த சர்வே ஆப் இந்தியாவுக்கு நிபந்தனையுடன் கூடிய விலக்கு: விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வழங்கியதுஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் கிராம குடியிருப்பு பகுதிகளின் வரைபட பணிக்கு ட்ரோன்களை பயன்படுத்த சர்வே ஆப் இந்தியாவுக்கு நிபந்தனையுடன் கூடிய விலக்கை,  விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை கணக்கெடுத்து அவற்றை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இணைப்பதுதான் மத்திய அரசின் ஸ்வாமித்வா திட்டம்.

இந்த கணக்கெடுப்பு பணி ஆளில்லா விமானங்கள்(ட்ரோன்) மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக இந்திய சர்வே அமைப்பு, விமான போக்குவரத்து துறை அமைச்சகம், விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் ஆகியவற்றிடம் அனுமதி கோரியது.

இதையடுத்து ட்ரோன் விதிமுறைகளில் இருந்து நிபந்தனையுடன் கூடிய விலக்கு அளித்து விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விலக்கு ஒராண்டு காலத்துக்கு அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இதில் எது முன்போ அதுவரை செல்லுபடியாகும்.

இந்த அனுமதி மூலம் ட்ரோன்களை பயன்படுத்தி, துல்லியமான வரைபடங்களை உருவாக்கி, கிராமங்களில் குடியிருப்பவர்களுக்கு அவர்களுக்கான சொத்துரிமையை வழங்க முடியும். இந்த வரைபட தகவல் அடிப்படையில், கிராமங்களில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு சொத்து அட்டைகள் வழங்க முடியும்.

இந்த வரைபடங்கள், கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கவும் உதவியாக இருக்கும். ட்ரோன்கள்  மூலம் படம்பிடிக்கப்படும் இடங்கள், புவியியல் தகவல் அமைப்பு ஆய்வகத்தில் இந்திய சர்வே அமைப்பால் ஆய்வு செய்யப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்