சர்க்கரை நோய் மற்றும் கொவிட்டுக்கு இடையேயான தொடர்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சர் வலியுறுத்துகிறார்

பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்


சர்க்கரை நோய் மற்றும் கொவிட்டுக்கு இடையேயான தொடர்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று மத்திய அமைச்சரும், நீரிழிவு நிபுணருமான டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தல்

சர்க்கரை நோய் மற்றும் கொவிட்டுக்கு இடையேயான தொடர்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று மத்திய அமைச்சரும், முன்னாள் நீரிழிவு மற்றும் மருந்துகள் துறை பேராசிரியரும், இந்தியாவின் நீரிழிவு குறித்த ஆய்வுகளுக்கான சங்கத்தின் வாழ்நாள் புரவலருமான டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.

‘டயாபடீஸ் இந்தியா’ சரவதேச மாநாடு-2021-ல் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு தொடக்கவுரை ஆற்றிய அவர், சர்க்கரை நோய் மற்றும் கொவிட்டுக்கு இடையேயான தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருவதாக தெரிவித்தார்.

“கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய விதிகளை கொவிட் நம்மை வகுக்க வைத்துள்ளது. இத்தனை பெரிய சர்வதேச மாநாட்டின் வெற்றியில் அது பிரதிபலிக்கிறது,” என்று அமைச்சர் கூறினார்.

இரண்டாம் வகை நீரிழிவு நோய் கடந்த இரு தசாப்தங்களாக இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும், தென் இந்தியாவில் தொடங்கி, வட இந்தியா, பெருநகரங்கள், மாநகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் அது வியாபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட்-நீரிழிவு தொடர்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திய அவர், சர்க்கரை நோய் உள்ள அனைவரையும் கொவிட் தாக்காது என்றும், கொவிட் தொற்று ஏற்பட்ட காரணத்தால் மட்டுமே நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படாது என்றும் கூறினார்.

நீரிழிவு துறையில் ஆற்றியுள்ள சிறப்பான பணிக்காக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு விருதுகளை டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்