லடாக்கை தூய்மையான மற்றும் பசுமையான யூனியன் பிரதேசமாக மாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம்


எரிசக்தி அமைச்சகம் யூனியன் பிரதேசத்தை கரிம பாதிப்பு இல்லாததாக ஆக்க சிஈஎஸ்எல், லடாக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

லடாக்கை தூய்மையான மற்றும் பசுமையான யூனியன் பிரதேசமாக ஆக்குவதற்காக மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எனர்ஜி எஃபிசியன்சி சர்வீசஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமெட்ட் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

பல்வேறு மின்சார மற்றும் எரிசக்தி சிக்கன திட்டங்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுத்தப்படும். இதன் முதல் கட்டம் ஜன்ஸ்கர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடங்கவிருக்கும் நிலையில், சூரிய சக்தி சிறு மற்றும் குறு தொகுப்பு தீர்வுகள், மின்சார சிக்கன ஒளி அமைப்பு, மின்சார சேமிப்பு சார்ந்த தீர்வுகள், திறன்மிகு அடுப்புகள் மற்றும் மின்சார போக்குவரத்து தீர்வுகளை யூனியன் பிரதேசத்தில் சிஈஎஸ்எல் செயல்படுத்தும்.

இது குறித்து ஏசிய லடாக் துணைநிலை ஆளுநர் திரு ஆர் கே மாத்தூர், “லடாக்கிற்கு போதுமான மின்சாரம் கிடைப்பது மிகவும் அவசியமானதாகும். லடாக்கில் உள்ள அணுகுவதற்கு கடினமான இடங்களில் பரவலாக்கப்பட்ட திறன்மிகு எரிசக்தி தீர்வுகள் போன்ற நிலைத்தன்மை மிக்க திட்டங்கள் தேவைப்படுகின்றன,” என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்