அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது.


இது சம்பந்தமாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட அறிக்கையில், “Discovered Small Fields ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழ் மூன்றாம் கட்ட ஏலத்தில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதிகளை சேர்த்ததால் அந்த ஏலத்தை நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் எந்த பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி இரண்டு நாட்கள்  முடிந்துள்ள நிலையில். அரியலூர் மாவட்டத்தில் பத்து ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஓஎன்ஜிசி நிறுவனம் ஜூன் மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது அதிச்சியளிக்கிறது.

L-1 PML எனும் 948.16 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுப்பதற்காக 2004 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் உரிமம் பெற்றது. இந்த பகுதியில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் எனும் ஊரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  பத்து ஆய்வுக் கிணறுகளையும் கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதியில் ஐந்து ஆய்வுக் கிணறுகளையும் அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 முதலில் அரியலூர் மாவட்டத்தில் பத்து ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரிய ஓஎன்ஜிசி ஆனால்

 ஜூன் 13 ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதல்வர் இந்திய பிரமருக்கு எழுதிய கடிதம் மூலம் தமிழ் நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது எனத் தெரிவித்துள்ள போது இரண்டே நாளில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது  கண்டனத்திற்குரியதெனவும்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறையின் கீழ் இயங்கும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உடனடியாக ஓஎன்ஜிசி அளித்துள்ள இந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு உத்தரவிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சரை பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்