தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி : அரசு ஆலோசனை

தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி : அரசு ஆலோசனை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தனியார் பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி, கல்வித் தரத்தை உயர்த்தவும், அரசு ஆலோசிக்கிறது. பல ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் படித்த பிள்ளைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு ஆண் டும், 50 ஆயிரம் மாணவர்கள் வரை, தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளிகளுக்கு மாறி வரும் நிலையில் கடந்த ஆண்டு  எண்ணிக்கை  உயர்ந்தது. 5.18 லட்சம் மாணவர்கள், அரசு பள்ளிகளை நாடி வந்து சேர்ந்துள்ளனர். பெற்றோர் விரும்பு வது ஆங்கில வழிக் கல்வியையே. தனியார் பள்ளிகளை அவர்கள் விரும்பிச் சென்றதற்கான கார ணமே, ஆங்கில வழிக்கல்விதான். தற்போது, அந்தத் திசையில் தமிழக அரசு முனைப்பு காட்டும்

முயற்சிகளைச் செய்கிறது ஆந்திர  மாநில அரசே ஆங்கில வழிக் கல்வியைத் தான் முதன்மைப்படுத்துகிறது,


ஆந்திர முதல்வரால் அங்கு வெளியிடப்படும் பள்ளிப் பாடப் புத்தகங்களில், ஒருபக்கம் தெலுங்கிலும் எதிர்ப்பக்கம்           ஆங்கிலத்திலுமாக பாடங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

ஏழை, எளிய மாணவர்களின் மீட்சிக்கு உதவும் மொழி, உலகத்தின் திறவுகோல் ஆங்கிலம் மொழி தான் என்பதை ஆத்திரா,தமிழகமும் புரிந்த நிலை வரவேற்கத்தக்கது, கல்வியாளர்களும், பெற்றோரும். அரசின் இதுபோன்ற முயற்சிகளால், அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து விடும் என்று தம்புகின்றனர். திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூரில், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்.

பள்ளிக் கட்டணம் தொடர்பாக புகார்களை, ஏற்கனவே உள்ள பாலியல் தொடர்பான புகாருக்கான எண் ணில் தெரிவிக்கலாம் அல்லது இ மெயில் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

புகார்களை விசாரிக்க தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் விசாரித்து, புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா ஊரடங்கால், தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளிகளைத் தேடி, பெற்றோரும், மாணவர்களும் வருகின்றனர்.

அப்படி தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளிகளுக்கு இடம் பெயர்ந்து வரும் மாணவர் களுக்காக, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த   நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கொரோனா காலத்தில், பள்ளி களைத் திறப்பது தொடர்பாக பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து செயல்ப டுவோம். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, தேர்ச்சி என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பெற்றோரிடம் இருந்து வரும் கருத்துக்கள் தொடர்பாக, ஆலோசனை செய்து வருகிறோம். என்றார்.     மேலும்  பள்ளி கல்வி இயக்குனரகத்தில் மாற்றுப்பணியிலிருந்த ஆசிரியர்கள், அவரவர் பள்ளிகளுக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள்,

அலுவலகப் பணி பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகின்றன. பள்ளிக்கல்வி அமைச்சரான அன்றில் மகேஷ் பொய்யாமொழி, கல்லித்துறையின் பொறுப்பைக் கவனித்தா லும், முதல்வர் நேரடிப் பார்வையில் நிர்வாகம் நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறை செயலர் உஷா, பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

 பள்ளிக்கல்வி  இயக்குனரகத்தில் பல்லாண்டுகளாக அலுவலகப் பணிகளில் ஈடுபட்டி ருந்த ஆசிரியர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

கற்பித்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள், அலுவலக பணிகளை பார்க்கக் கூடாது என உத்தர விடப்பட்டுள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து, பள்ளி கல்வி இயக்குனரகத்தில் அலுவலர்களாக பணியாற்றியவர்கள், அவரவர் நியமிக்கப்பட்ட இடங்களுக்கே மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் துவங் கியுள்ள இந்த மாற்றம் படிப்படியாக, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட, வட் டாரக் கல்வி அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பணிகளை, பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் தீவிரப்படுத்தியுள்ள மாற்றத்தால், பள்ளிகளில் காலியாக இருந்த இடங்களுக்கு ஆசிரியர்கள் கிடைத்துள்ளதாக மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம்  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் 14 ஆம் தேதி கூடியநிலையில், நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தையும் இந்தக்குழு கேட்க இருக்கிறது.  தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து neetimpact2021@gmail.com என்ற இணைய முகவரியில் கருத்துக்கள் கூறலாம். வரும் 23 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பிவைக்கலாம் என ஏ.கே. ராஜன் குழு அறிவித்துள்ளது.                                  நீட் தேர்வு குறித்து அமைக்கப்பட குழு பொது மக்களிடம் கருத்து கேட்டுள்ளது...

நம் தமிழக மக்களுக்கு நீட் தேவையில்லை கடிதங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வையுங்கள்.

அதற்கான பார்மெட் கீழே உள்ளது.

உங்கள் மெயிலில் உங்கள் பெயருடன் இதை அனுப்புங்கள்.

மெயில் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி :

neetimpact2021@gmail.com 

மூன்று விதமான கல்வி  ஒரே விதமான தேர்வு மக்களை பாதிக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்