சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிக்க விடாமல் லுக் அவுட் நோட்டீஸ் டில்லி சித்தரஞ்சனில் கைது

 டெல்லி சித்தரஞ்சனில் கைது செய்யப்பட்ட மொட்டை அடித்த  சிவசங்கர் பாபாவை தமிழ்நாட்டுக்கு அழைத்துவர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்த நீதிமன்றம் 


ஆணையிட்டுள்ளது.                                                      பாலியல் வழக்கில் சிக்கிய சுஷில் ஹரிபள்ளி நிறுவனர் சாமியார்


சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.சென்னை கேளம்பாக்கத்திலுள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக மூன்று புகார்கள் கொடுக்கப்பட்டதையடுத்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்   சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி ஜுன் 13 ஆம் தேதி டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடங்கினர். சி.பி.சி.ஐ.டி பிரிவில் மூன்று தனிப் படைகள் அமைக்க்ப்பட்டு ஒரு குழு சிவசங்கர் பாபாவை விசாரணைக்கு கூட்டிவர டேராடூன் விரைந்துள்ளது. இரண்டாம் குழு சிவசங்கர் பாபாவின் செல்போன் டவர் லொக்கெஷனை வைத்து இருப்பிடத்தை கண்காணித்து, அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமலிருக்க அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

 சுஷில் ஹரி பள்ளியில் மொத்தம் 73 ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றும் நிலையில்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க சிவசங்கர் பாபாவிற்கு உதவிய ஆசிரியர், ஆசிரியைகள் யாரென புகார் அளித்துள்ள மாணவிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பட்டியலெடுத்து அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சி.பி.சி.ஐ.டி காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.


, மாமல்லபுரம் காவல் துறையினர் தங்களின் முதல் தகவல் அறிக்கையில் ஏற்கனவே சுசில் ஹரி பள்ளியைச் சேர்ந்த பாரதி, தீபா ஆகிய இரு ஆசிரியைகளின் பெயரை சேர்த்துள்ள நிலையில் முதற்கட்ட விசாரணை அவர்களிடமிருந்து துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி விரைவில் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு விடுப்பார்கள் எனவும் தகவல் வெளியான நிலையில்.

சிவசங்கர பாபா எனற சாமியார் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி என்ற இன்டர்நேஷனல் பள்ளி நடத்தி ஆன்மீகம் என்ற பெயரில் தான்தான் கடவுள் என்று சில முட்டாள்களை நம்ப வைத்து 150 சிறுமிகளுக்கு மேல் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தல் செய்து இது போன்ற எல்லா அக்கிரமங்களையும் செய்கிறார்கள்.

இது போன்ற அயோக்கிய சாமியாரான சிவசங்கர் பாபாவை அடிக்கடி சந்திப்பதில் ஒருவர்தான் பாஜக வின் நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் மற்றும் K.T.ராகவன்.அது மட்டும் அல்ல. இந்த சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் ஆஸ்தான டான்ஸ் மாஸ்டரே K.T.ராகவனின் மனைவி மீனாட்சி கே.டி.ராகவன்தான்.150 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிற செயல் அங்கு உள்ளவர்களின் துணை இல்லாமல்,அரசியல் பின்பலம் இல்லாமல் இவைகள் நடக்க வாய்ப்புகளில்லை. டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை தமிழ்நாட்டுக்கு அழைத்துவர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்த நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்