பாண்டிச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மதுக் கடைகள் திறக்கப்படுமென யூனியன் பிரதேச முதல்வர் என்.ரெங்கசாமி தகவல்

பாண்டிச்சேரியில்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  மதுக் கடைகள் திறக்கப்படுமென யூனியன் பிரதேச முதல்வர் என்.ரெங்கசாமி

அறிவித்துள்ளார். புதுச்சேரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி. புதுச்சேரியில் 42 நாட்களுக்குப் பினா கடற்கரைகள், வழிகாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

காய்கறி, மளிகை உள்பட அனைத்து கடைகளையும் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை யூனியன் அரசு அறிவித்துள்ளதில். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்கவும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்