பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் அஷோக் பனாகரியா மற்றும் எழுத்தாளர் டாக்டர் சித்தலிங்கையா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

பிரதமர் அலுவலகம் புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் டாக்டர் சித்தலிங்கையா மறைவுக்கு பிரதமர் இரங்கல்


புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் டாக்டர் சித்தலிங்கையா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“அவரது திறன்வாய்ந்த எழுத்து, கவிதைகள் மற்றும் சமுக நீதிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக டாக்டர் சித்தலிங்கையா நினைவு கூறப்படுவார். அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த துக்க தருணத்தில் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மற்றும் பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் அஷோக் பனாகரியா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் அஷோக் பனாகரியா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மிகச்சிறந்த நரம்பியல் நிபுணராக தனது முத்திரையை டாக்டர் அஷோக் பனாகரியா பதித்துள்ளார். மருத்துவத் துறையில் அவரது சிறப்பான சேவை பல தலைமுறைகளுக்கு மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும். அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்