ஒற்றுமையின் அடையாளமாக ஜம்மு & காஷ்மீரின் தேவிகா நதி தேசிய திட்டம் விளங்குகிறது: மத்திய அமைச்சர்

பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக


ஜம்மு & காஷ்மீரின் தேவிகா நதி தேசிய திட்டம் விளங்குகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

நமது ஒன்றிணைந்த பெருமை மற்றும் நம்பிக்கையை தேவிகா நதி தேசிய திட்டம் பிரதிபலிக்கும் என்றும், வட இந்தியாவில் முதல் முறையாக இத்தகைய திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

எனவே, கொள்கை மற்றும் அரசியல் சார்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் கருத்துகளையும் இத்திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள் செவிமடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

“இத்திட்டம் நிறைவடையும் போது, நாட்டின் இதர பகுதிகளில் இத்தகைய திட்டங்களுக்கு இது முன் உதாரணமாக இருப்பதோடு மட்டுமில்லாமல், நூற்றாண்டுகளாக தேவிகா நதி அடையாளப்படுத்தி வரும் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

தேவிகா நதி புனரமைப்பு திட்டத்தை ஆய்வு செய்த பின்னர் கூட்டமொன்றில் பேசிய அமைச்சர், பணியின் தரத்திலும், உள்ளூர் ஆலோசனைகள் மற்றும் எந்த பகுதியில் இருந்து வரும் கருத்துகளை பெறுவதிலும் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என்று கூறினார். தேவிகா நதி திட்டத்தை நம்பிக்கைக்கான திட்டமாக மட்டுமே அல்லாமல், ஒத்த கருத்து மற்றும் ஒற்றுமையின் சின்னமாக தாம் பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

ரூ 190 கோடி மதிப்பிலான மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய நதி புனரமைப்பு திட்டமான தேவிகா நதி திட்டத்தின் கீழ், பல்வேறு மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

கங்கை நதியின் சகோதரி என்று தேவிகா நதி இந்துக்களால் கருதப்படுவதால் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இது திகழ்கிறது. உதம்பூரில் முக்கியமான தேவிகா பாலத்தையும் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதோடு, ராணுவ வாகனங்கள் எளிதாக இப்பகுதியை கடந்து செல்வதற்கும் இந்த தேவிகா நதிப்பாலம் வழிவகுக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்