தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் விரைவில் தலைவர் விஜயகாந்த் கடிதம்

தேர்தல் முடிந்ததும் தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததாலும்,கொரோனா பரவல் காரணமாகவும், கூட்டம் சேர்க்கக் கூடாது என்பதற்காகவும் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியவில்லை. வெகு விரைவில் ஊரடங்கு முடிந்தவுடன் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம்.

இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்லலாம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது. தேர்தலுக்கு முன்பு யாருடன் கூட்டணி என்பதை மாவட்டச் செயலாளர்களிடம் கேட்ட பிறகே முடிவெடுக்கிறோம். அதேபோல் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து தேமுதிகவை எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மேலும் தேமுதிகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். என  தேமுதிக தலைவர்  விஜயகாந்த் அறிக்கை

நிர்வாகிகள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். மேலும் சமூக தளங்களில் தவறான செய்தி பரப்புவது, தலைமைக்கு களங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தேமுதிகவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஊரடங்கு முடிந்தவுடனோ அல்லது அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றோ மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வெகுவிரைவில் நடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே நிர்வாகிகள் உறுதியோடு இருந்து வளர்ச்சியை நோக்கி பயணிப்போம். இவ்வாறு அறிக்கையில் கூறியிருந்தார் விஜயகாந்த்.1972 ல் எம்ஜிஆருக்கு  இருந்த மக்கள் செல்வாக்கு போல நடிகர் விஜயகாந்த் கட்சி துவங்கிய போது இருந்த எழுட்சி சாமானிய மக்கள் மனதில் அவர் குறித்த பதிவுகள் பல அது தான் அவரை சினிமா கவர்ச்சியுடன் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக்கியதும் அவரது இயக்கம் அரசியல் அங்கீகாரம் பெற்றதும் நடிகர் ரஜினிகாந்துக்கு வராத தைரியம் விஜயகாந்த் எடுத்த நிலை சாமானிய மக்களே..... கடந்த 2007 ஆம் ஆண்டு விருத்தாசலம் பகுதி சம்பவம் இது " நீ நல்லா இருக்கீயா?

  அதுவே போதும் என அப்பாவியாக விருத்தாசலம் அடுத்த கிராமத்தில் ஒரு ஏழ்மையான பாட்டி நடிகர் விஜயகாந்திடம் கூறியதால் திகைத்துதான் போனார் நடிகர் விஜயகாந்த்..!

2007 ஆம் ஆண்டில் விருத்தாசலம் தொகுதியில் அரசியல் சுற்றுபயணம் மேற்கொண்ட போது கம்மாபுரம் அருகில் ஒரு பாட்டி விஜயகாந்திடம் வந்து நல்லா இருக்கீயா அடிக்கடி வந்து போ அதுவே போதும் என்றார். ஏன் பாட்டி உனக்கு ஏதாவது தேவையா, ரோடு வசதி, தண்ணீர் வசதி எதுவா இருந்தாலும் சொல்லுங்கள் நான் ரெடி பண்றேன் என எம்எல்ஏவாக இருந்த விஜயகாந்த் கூறினார் அதல்லாம் வேணாம் நீ பத்திரமா இரு இது என் பேரன் என அவனை அருகில் நிறுத்தி ஒரு புகைப்படமெடுத்துக்கொண்டார்

பிறகு காரில் செல்லும்போது விஜயகாந்த் அவருக்கு வேண்டிய திரைநிநி செல்வம் என்ற  பத்திரிகையாளரிடத்தில் என்ன செல்வம் இவ்வளவு வெகுளியாக எதுவும் வேண்டாம் நீ நல்லா இருந்தா போதும்னு சொல்லுது அந்தப் பாட்டியென உணர்ச்சிவசப்பட்டு  ஆதங்கப்பட்டார் கேப்டன் என் அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களால் அறியப்பட்ட அப்போது தமிழக கிராமபுறங்களில் தனி மவுசு இந்த கேப்டன் நடிகர் விஜயகாந்துக்கு 

அப்பேர்பட்ட மனிதன் இன்று உடல்நிலை சரியில்லாமல் போனதால் தேமுதிக என்ற கட்சியின் நிலை சீர்குலைந்துவிட்டது இதை நினைத்தால் கால சுழற்சியில் என்னவெல்லாம் தலைகீழாக மாறிவருகின்றது என்று பலர் விவாதம் வர காரணம்.அவரது கட்சியில் தற்போது வழிநடத்தும் அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் இருவரும் தான். எந்த எதிர்பார்ப்புடன் அவரிடம் வந்த ரசிகர்கள் கூட்டம் அதன் தளபதிகள் பலர் கட்சி மாறப்போவதாக வந்த தகவல் தான் இப்போது வந்த கட்சியின் கடிதம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்