தமிழ்நாட்டில் பணி செய்யும் காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை

 தமிழ்நாட்டில் பணி செய்யும் காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை அளிக்க வேண்டும்,                                   வார ஓய்வு நாளில் விருப்பத்துடன் பணியாற்றும் காவலர்களுக்கு மிகைநேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் - தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சுற்றறிக்கை           காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு, பிறந்தநாள், திருமண நாட்களில் விடுமுறை வழங்க வேண்டுமென அறிவிப்பு! 

காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிப் பாதுகாக்க ஏதுவாகவும், குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், தமிழ்நாடு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு மற்றும் பிறந்தநாள் திருமண நாட்களில் விடுமுறை வழங்க வேண்டுமென காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவு.

தமிழ்நாட்டின் அனைத்து மாநகரக் காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு, காவல்துறை தலைமை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை :-


1. காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்க ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.

2. வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.

3.காவல் ஆளிநர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில்

அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

4.தமிழக காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட ஆளிநர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

5. மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அனைத்து காவலர்களுக்கும் வாரத்தில் ஒருநாள் விடுப்பு என்பது தி.மு.கவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா