மத்திய பணியாளர் தேர்வாணையம்
இந்திய பொருளாதார பணி/இந்திய புள்ளியியல் பணி தேர்வு, 2020-ன் இறுதி முடிவுகள்
2020 அக்டோபர் 16 முதல் 18 வரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய இந்திய பொருளாதார பணி/இந்திய புள்ளியியல் பணி தேர்வு, 2020-ன் எழுத்து தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும், 2021 ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற நேர்முக தேர்வுகளின் அடிப்படையிலும், இந்திய பொருளாதார பணி மற்றும் இந்திய புள்ளியியல் பணியில் நியமிக்கப்படுவதற்காக மதிப்பெண்களின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதார சேவையில் உள்ள 15 பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு ஆறும், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு இரண்டும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மூன்றும், பட்டியல் பிரிவினருக்கு இரண்டும், பழங்குடியினருக்கு இரண்டும் ஒதுக்கப்பட்ட வேண்டும்.
இந்திய புள்ளியியல் சேவையில் உள்ள 50 பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு 25-ம், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு ஐந்தும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 12-ம், பட்டியல் பிரிவினருக்கு ஐந்தும், பழங்குடியினருக்கு மூன்றும் ஒதுக்கப்பட வேண்டும்.
இந்திய பொருளாதார சேவையில் உள்ள 15 பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினர் ஆறு நபர்களும், பொருளாதாரத்தில் நலிவுற்றோர் இரண்டு நபர்களும், இதர பிற்படுத்தப்பட்டோர் மூன்று நபர்களும், பட்டியல் பிரிவினர் இரண்டு நபர்களும், பழங்குடியினர் இரண்டு நபர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய புள்ளியியல் சேவையில் உள்ள 50 பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினர் 17 நபர்களும், பொருளாதாரத்தில் நலிவுற்றோர் எட்டு நபர்களும், இதர பிற்படுத்தப்பட்டோர் 17 நபர்களும், பட்டியல் பிரிவினர் 5 நபர்களும், பழங்குடியினர் 3 நபர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
www.upsc.gov.in எனும் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம்
கருத்துகள்